400+ Wedding Anniversary Wishes In Tamil For Celebrate Love – திருமண நாள் வாழ்த்து

wedding anniversary wishes in tamil

இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை தருகிறீர்கள்.உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டுவிழா வாழ்த்துக்கள்

சந்திரன் நட்சத்திரங்களைப் போலஉங்கள் வாழ்க்கை பிரகாசமாக பிரகாசிக்கட்டும்,உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிரப்பப்படட்டும்பல திருமண ஆண்டு வாழ்த்துக்கள்

சூரியன் சந்திரனாக இருக்கும் வரை,அதுவரை உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்,உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான திருமண ஆண்டு வாழ்த்துக்கள்

வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான திருமணத்தின் பின்னால் உள்ள ஒரே ரகசியம், நீங்கள் விரும்பும் ஒரு நபரை திருமணம் செய்வதுதான்

பிறக்கும் வரை உங்கள் உறவைத் தொடரட்டும்,மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் புதிய வண்ணங்களால் நிரப்பும்,

கடவுளுடனான உங்கள் உறவு பாதுகாப்பாக இருக்கட்டும்,இனிய திருமண ஆண்டுவிழா

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கண்ணுக்கு தெரியாத சக்தியாக இருக்கிறீர்கள்.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

திருமண நாள் வாழ்த்துக்கள்

காலை முதல் மாலை வரை,உங்கள் வாழ்க்கையின் வாகனம் தொடர்ந்து இப்படியே இயங்குகிறது,உங்கள் உறவில் அன்பை வைத்திருங்கள்,இனிய திருமண ஆண்டுவிழா

உங்கள் இருவரையும் ஒருபோதும் தவறவிடாதீர்கள்,ஒருவருக்கொருவர் தலையிட நீங்கள் கடவுள் ஆசீர்வதிப்பார்,இந்த ஏழு பிறப்புகளுக்காக இந்த உறவை வைத்துக் கொள்ளுங்கள்,அந்த மகிழ்ச்சி ஒருபோதும் இழக்கப்படுவதில்லைஇனிய திருமண ஆண்டுவிழா

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்

காகர் முதல் சாகர் வரை,காதல் முதல் நம்பிக்கை வரை,உங்கள் ஜோடி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருக்கட்டும்இந்த ஆசீர்வாதத்துடன் திருமண ஆண்டு வாழ்த்துக்கள்

ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும் வெளியே மகிழ்ச்சி இருக்கிறது,உங்கள் ஜோடி ஒருபோதும் உடைக்கவில்லை,உங்கள் குடும்பம் வாழட்டும்,கடவுள் ஆசீர்வதிப்பார்

இந்த நம்பிக்கையின் பிணைப்பு இப்படியே இருக்கட்டும்,உங்கள் வாழ்க்கையில் காதல் கடல் இதுபோன்று பாயும்,கடவுள் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்த வாழ்க்கையை வாழட்டும்,உங்கள் திருமண ஆண்டுவிழாவிற்கு பல வாழ்த்துக்கள்

இந்த காதல் பிணைப்பு ஏழு சுற்றுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது,வாழ்க்கைக்காக இப்படி கட்டுப்பட்டிருங்கள்,உங்கள் அன்பை யாரும் பார்க்க முடியாதுநீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழாக்களைக் கொண்டாடுகிறீர்கள்

நீங்கள் இருவரும் எல்லா நேரத்திலும் ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்கிறீர்கள்.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்க்கையில் மழை பெய்யட்டும்,மேற்கண்ட மழையின் ஆசீர்வாதம்,இருவரும் தொடர்ந்து வாழ்க்கையின் காரை ஓட்டுகிறார்கள்,இனிய திருமண ஆண்டுவிழா

wedding wishes in tamil

உங்கள் வாழ்க்கை விளக்கு போல ஒளிரட்டும்உங்கள் ஆசீர்வாதம் கடவுளிடம் இருக்கட்டும்ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற ஆண்டு நிறைவை நாங்கள் விரும்புகிறோம்.

சொந்தங்கள் சுற்றி நின்று
ஊரே கூடி நின்று
அக்னி சாட்சியாய் இணைந்த கரங்கள்
ஆண்டுகள் கடந்தாலும்
பிரிந்திடாது இருந்திட
இத்திருமண நாள்
சிறப்புடனே அமைந்திட
திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!

அறிமுகமற்ற உங்களை
காதலில் விழ வைத்திட்டது
திருமணம்!
கரை காணாத காதலைக் கண்டிட
என்றும் இணைப்பிரியாது இருந்திட
வாழ்த்துகிறேன்

ஊர் கூடி கொண்டாடிய நாளிதனை
ஊர்மெச்சும் படி வாழ்ந்திட
திருமண நாள் வாழ்த்துக்கள்

கண்ணிமைத்திடும் நொடிப்
பொழுதெல்லாம் காதல் பெருகிட
உறவு பலப்பட
கல்யாண நாள் வாழ்த்துக்கள்

வாழ்நாள் எல்லாம்
அன்பும் மகிழ்ச்சியும் பொங்கிட..
நீடித்து நிலைக்கட்டும்..
இத்திருமண உறவு!

இன்ப துன்பத்தில் நட்புக்களாய்..
என்றும் வண்ணம் மாறாத பறவைகளாய்..
வானூயரப் பறந்திடும் இராஜாளியாய்..
உங்கள் திருமணப் பந்தத்தின் ஆயுள்
வாழ்நாள் முழுதும் தொடர்ந்திட…
இனிய திருமணநாள் வாழ்து்துக்கள்!

முதல் என்பது முடிவல்ல!
முதல் திருமணநாள்
தொடக்கத்தின் ஆரம்ப புள்ளியே!
இணைந்தே தொடர்ந்து பயணித்திட
பிரார்த்தனைகள்!

பல இன்னல்களை சகித்து
மின்னல் கீற்றாய் புன்னகை மின்ன
கடந்து வந்த ஒருவருடம்
இன்னும் பல வருடங்களாய்
நீடித்திட வாழ்த்துக்கள்!

எதிர்ப்புக்களுக்கு மத்தியில்
காதலாய் கரம்பிடித்து
ஒருவருடத்தை காதலாலே
கடந்து விட்ட உங்கள் காதலின் ஆயுள்
நீண்டதாக இருக்க வேண்டி
முதல் திருமணநாள் வாழ்த்துக்களை
தெரிவிக்கிறேன்!

கடந்த வருடம் இந்நாளிலே
உங்கள் திருமணத்தை
நாம் கொண்டாடிய ஞாபகம்!
மின்னல் வேகத்தில்
நாட்கள் நகர்ந்து விட்ட உணர்வு!
உங்கள் முதல் திருமணநாள்
தித்திப்பாய் அமையட்டும்!

சிறிய சிறிய செல்லச் சண்டைகளிலும்
செல்லச் சிணுங்கள்களிலும்
நம்மை நாம் புரிந்துக் கொள்ள
எடுத்த முயற்சியிலும்
நமக்கு நாமே செய்துக் கொண்ட
சத்தியங்களிலும்
நம் திருமணம் ஓராண்டைத் தொட்டதே
தெரியவில்லை…
முதல் திருமணநாள் வாழ்த்துக்கள்

happy wedding anniversary in tamil

ஒரு வருடம் கழியவே
பல வருடம் காத்திருக்கிறது
நீண்டதோர் வாழ்க்கை பயணம்
ஒற்றுமையுடனே இணைந்து
பயணத்திட முதல் திருமண நாளில்
முத்தான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்

முதலைப் போலவே
வாழ்வின் முடிவு வரையும்
உன்னுடனே இருப்பேன் என
முதல் திருமண நாளிலே
சத்தியம் செய்கிறேன் அன்பே!

முதன் முறை நாம் பார்த்தது
தொடங்கி முதன்முறை
பெற்றோர் சம்மதத்துடன்
கைப்பிடித்தவரை
அனைத்தும் பசுமையாய்
நினைவிலாடுகிறது!
நம் முதற் திருமணநாள் வாழ்த்துக்களை
இன்று உன்னோட பகிர்வதில்
மட்டற்ற மகிழ்ச்சி!

நம் வாழ்க்கைப் பக்கத்தின்
முதல் திருமணநாள் இது!
வார்த்தைகளைக் கோர்த்து
வாழ்த்துகிறேன்!
என் துணைக்கு முதல் திருமணநாள்
வாழ்த்துக்கள்!

கனவுடனே நகர்ந்த நாட்கள்!
மெய்யான நாளின்று!
என் இணைக்கு
முதலட திருமணநாள் வாழ்த்துக்களை
சமர்ப்பிக்கிறேன்!

வாழ்க்கை எனும் பாதையிலே
வழிப்பட்ட முட்களெல்லாம்
ஒருவருக்காய் இன்னொருவர் தாங்கி நின்றீர்!
உம் அன்புக்கு சாட்சியாய் எண்ணிக்கை
வளர்ந்து நிற்கிறது இருபத்தைந்தாய்!
இருபத்தைந்தாவது திருமணநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் நம்பிக்கையும் காதலும்
இருபத்தைந்து வருடங்களை
எட்டிவிட்ட தருணத்தை கொண்டாடி
மகிழ்ந்திட திருமணநாள் வாழ்த்துக்கள்!

முன்மாதிரியான காதல் வாழ்வை
பகிர்ந்து திருமணத்தின் வெள்ளி விழாவை
பூர்த்தி செய்திட்ட இனிய தம்பதிகளுக்கு
இருபத்தைந்தாம் திருமணநாள் வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்!

25 வருடங்களக்கு முன் அறிமுகமாகி
காதலால் சலிக்காமல் பல தடைகளை
எதிர்கொண்டு வாழ்ந்திடும் உங்களுக்கு
இனிய 25ஆவது திருமணநாள் உண்டாகட்டும்!

நம் கனவுகளைப் போன்று கஷ்ட்டங்கள்
விடிந்ததும் மறைவதில்லை..
இருந்தும் நிஜவாழ்க்கையின் கஷ்ட்டங்களை
கடந்து வந்து 25ஆவது திருமண நாளில் நிற்பது
உங்கள் அன்பினாலே சாத்தியமானது!
என்றென்றும் மனநிறைவுடன் வாழ
25ஆவது திருமணநாள் வாழ்த்துக்கள்!

திருமண வாழ்த்துக்கள்

25ஆவது திருமணநாளுக்கு வாழ்த்துக்கள்!
இதுபோலவே என்றும் மனமொத்த தம்பதியினராய்
மிளிர்ந்திட எனது பிரார்த்தனைகள்!

25ஆவது திருமண நாளில்
அடியெடுத்து வைத்திருக்கும்
அதிர்ஷ்ட்டக்கார தம்பதியினர் நீங்கள்!
வயது நூறாயினும் மகி்ழ்ச்சி குறைவின்றி
இருக்க வாழ்த்துகிறேன்

அப்பா, அம்மா உங்களை
பெற்றோராய் பெற்றது
எனது அதிர்ஷ்ட்டமே!
உங்கள் இருவருக்கும’ இடையிலுள்ள
புரிந்துணர்வும் காதலும்
என்னை வியக்க வைக்கிறது!
இது போன்று அன்போடு ஆசிர்வதிக்கப்படவர்களாய்
வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

எனக்கு அதிசிறந்த பெற்றோராய்
என் குழந்தைகளுக்கு பாட்டன் பாட்டியாய்
நீங்கள் இருவரும் எங்களுக்கு கிடைத்தது
இறைவனின் ஆசிர்வாதமே!
இந்த திருமணநாள் உங்களுக்கு மகிழ்ச்சி
நிறைந்ததாய் இருக்க வாழ்த்துகிறேன்!

என் அழகான மனைவி! திருமண சபதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் ஒன்றாக உச்சரித்ததை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அன்பான திருமண ஆண்டுவிழா வாழ்த்துக்கள்!

உங்கள் மீதான என் அன்பை எதையும் அளவிட முடியாது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

துன்பம் கூட எனக்கு மகிழ்ச்சியாய் தோன்றுகிறது உன் காதல் என்னுடன் இருந்தால். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மனைவி.

நீங்கள் ஒரு அற்புதமான தாய், எனக்கு ஒரு அழகான மனைவி. நான் உன்னை எப்போதும் நேசிக்கிறேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

என் வாழ்க்கையை கற்பனை செய்யமுடியாத ஆச்சரியமான மற்றும் மகிழ்ச்சியான திருமண ஆண்டாக மாற்றியமைக்கு நன்றி, என் அன்பே! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

காதலிலும் நம்பிக்கையிலும்
சிறந்த முன்மாதிரியான தம்பதிகளை
என் பெற்றோராய் அடைந்ததில் மகிழ்ச்சி!
பொன்னான திருமணநாள் வாழ்த்துக்கள்!

அப்பா, அம்மா!
உங்கள் இருவரினாலே அற்புதமான
குடும்பத்தை பெற்றேன்…
பாசத்தின் உணர்ந்தேன்..
காதலின் உன்னதத்தை அறிந்தேன்…
பல பாடங்கள் உங்களிடமே கற்றேன்..
உலகின் சிறந்த பெற்றோருக்கான விருதை
உங்களுக்காகவே சமர்ப்பணம் செய்வேன்..
என்றும் என்னோடு துணை நிற்கும்
உங்களிருவருக்கும் இத்திருமணநாள்
இனிமையாக அமையட்டும்!

இன்னொரு வருடம் வந்து விட்டது!
நான் கொண்டாடி மகிழ்ந்திடவே வந்து விட்டது!
என் அப்பா, அம்மாவின் திருமண நாள்!
உலகின் தலைசிறந்த பெற்றோரே!
உங்களுக்கு திருமணநாள் நல் வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் பலகோடி ஆனந்தம்!

எப்போதும் வற்றாத நீராய்
உங்கள் காதல்!
உங்கள் இருவரின் காதலும்
என்னை மகிழ்விக்கிறது!
என்றும் என்றென்றும் காதலுடனே
இன்னும் பல திருமணநாட்களை சந்தித்திட
பிரார்த்திக்கிறேன்!
தித்திக்கும் நினைவுகளுடன் திருமண நாள்
அமைந்திட வாழ்த்துக்கள்!

உங்கள் தோற்றத்தில் மாற்றமுண்டு..
ஆனால் உங்கள் காதலில் துளியும்
மாற்றமேதும் இல்லை..
பிரம்மிக்க வைக்கிறது உங்கள்
வாழ்க்கை பயணம்!
இன்று போல் என்றும் காதலுடன்
வாழ்ந்திட மகிழ்வான திருமணநாள் வாழ்த்துக்கள்!

tamil marriage valthu kavithaigal

அன்பினால் மட்டுமே குடும்பத்தை
ஆளத் தெரிந்த என் அன்பின் பெற்றோருக்கு
திருமணநாள் வாழ்த்துக்கள்!

புரிதல்களில் பிரிதல் இன்றி
நான் நீ என்பது நாமெனக் கொண்டு
விட்டுக்கொடுத்து வாழ்கையிலே
உறவுகள் தோற்பதில்லை…
இதுபோலவே இன்னும் பல
திருமணநாட்களை கொண்டாடி
மகிழ்ந்திட பிரார்த்திக்கிறேன்…
மட்டற்ற மகிழ்ச்சியுடன்
தொடங்கட்டும் இவ் இனிய நாள்!
திருமணநாள் நல் வாழ்த்துக்கள்!

நிறை குறைகளை ஏற்று
உற்றார் சுற்றத்தார்
வாழ்த்துக்களை பெற்று
இம்மண்ணில் வாழ்ந்திடும்
காலமெல்லாம்
உங்கள் திருமண உறவும் நீடித்திட
இத்திருமணநாளிலே வாழ்த்துகிறேன்

புன்னகையுடனும்
வற்றாத நதியாய்
கடல் சேர்ந்தும் தீராத நீராய்
உங்கள் இல்லற வாழ்வில்
மகிழ்ச்சி பொங்கட்டும்!
பொன்னான திருமணநாள் வாழ்த்துக்கள்!

விழிகளை காத்திடும் இமையைப் போல்
திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர்
இமைப் போல் இணைப்பிரியாது
வாழ்ந்திட வாழ்த்துக்கள்!

இன்பங்களில் பங்கெடுத்து
துன்பங்களில் துணை நின்று
தன்னம்பிக்கை இழந்திடாமல்
வாழ்வின் இருபக்கங்களையும்
சேர்ந்தே எதிர்கொண்டு
குடும்பமெனும் குருவிக்கூட்டில்
பற்பல சிறப்பு பெற்று வாழ்ந்திட
இன்றைய திருமணநாள்
அத்திவாரமாய் அமையட்டும்

வாழ்வின் மறக்க முடியாத
ஓர் அங்கம் திருமணம்!
அது அன்றைப் போல் என்றுமே
மகிழ்வுடனே தெடரட்டும்!
இத்திருமணநாளும் அற்பதமாய்
அமையட்டும்!

பூக்களென என என் எழுத்துக்களை நினைத்து
அன்புடனே திருமண நாள் வாழ்த்துக்களை
வார்த்தைகளால் அள்ளித் தெளிக்கிறேன்!
மகிழ்வான நாளாய் அமையட்டும்
உங்கள் திருமணநாள்!

நான் முதன் முதல் இட்ட
மூன்று முடிச்சிற்கு
வயது சொல்லும் நாள் இன்று!
நானிட்ட மாங்கல்யத்தை போற்றிடும்
என் அன்பு மனைவிக்கு
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
உண்டாகட்டும்!

tamil marriage valthu kavithaigal images

அருமையான துணையுடன்
கரம் கோர்த்ததில் மகிழ்வடைகிறேன்!
உன்னுடனே என் வாழ்க்கை
நகர்ந்திட ஆசையடி பெண்ணே!
என் காதல் மனைவிக்கு
அவள் காதல் கணவனிடமிருந்து
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

நீ தந்த புன்னகை
இன்னும் இனிக்கிறது..
உன்னாலே நான் சிரித்த
நாட்கள் ஏராளம்…
நன்றி சொல்லி உன்னை
வேறுபடுத்திட விருப்பமில்லை..
எனக்காகப் பிறந்தவளுக்கு
திருமணநாள் வாழ்த்துக்கள்!

என் ஆரோக்கியம் குன்றினாலும்
உன் காதலில் நீ குறை வைத்ததில்லை..
அம்மாவாய் என்னை பத்திரமாய்
பார்த்துக் கொண்ட உன்னை
ஆயுள் உள்ளவரை மறவேன் பெண்ணே!
நம் காதலின் ஆயுள் இன்னும் நீள
பிரார்த்தித்துக் கேட்பேன்!
என் முதல் சொத்தே நீ தான் பெண்ணே!
திருமணநாள் வாழ்த்துக்கள் என் இனியவளே!

கெட்டிமாளம் முழங்க
மாங்கல்யம் கழுத்திலேறி
உறவினை ஊருக்குச் சொல்ல
நேசம் பொங்கப் பார்த்துக் கொண்ட
இருவிழிகளினதும் காதலும்
இதுபோலவே பல திருமணநாளை
ஒன்றாகக் கொண்டாடிட வாழ்த்துக்கள்!

இளமை முதுமையைத் தொட்டாலும்
உங்கள் உறவில் சிறு விரிசல்
விழாமல் இருந்திட
உங்கள் கல்யாண நாளிலே
பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்

வாழ்நாள் ஆயுள் வரத்தை பெற்று
உங்கள் காதல் தொடரட்டும்!
மலரும் ஒவ்வொரு திருமணநாளும்
இதுபோலவே என்றென்றும்
தித்திப்பாய் இருக்கட்டும்!

கலாவதியானது
காதலாய் காத்திருந்த நாட்களே!
இனி கலாவதியில்லா
பயணமொன்று தொடரும்…
ஒவ்வொரு ஆண்டும் திருமணநாளாய்
உங்கள் உறவை அது பேசும்…
இப்பயணத்திலே காணும் சிறு சிறு
சஞ்சலங்களையும் அன்பால் வென்று
இன்னும் பல்லாண்டு வாழ்ந்து
பல திருமணநாட்களைக் கொண்டாட
வாழ்த்துக்கள்!

உங்கள் துணையோடு நீண்டதோர்
பயணம் காத்திருக்கிறது..
திருமணத்திலே இணைந்தது
இரு மனங்கள் மட்டுமல்ல
இரு குடும்பங்களும் தான்..
புரிந்துணர்வுள்ள துணையாக
கூடவே நின்றிட
அவர்கள் குடும்பத்தை
தன் குடும்பமாய் ஏற்று நகர்ந்திட
இத் திருமணநாள் சிறப்பாக அமைந்திட
வாழ்த்துக்கள்!

கடந்து வந்த கசப்புக்கள் எல்லாம்
மாயமாய் மறையட்டும்!
புத்தம் புது மலரைப் போலவே
வனப்புடன் தொடங்கட்டும்
உங்கள் திருமணநாள்!

anniversary wishes in tamil

இத்தனை வருட சுமைகளையும் காதலால்
மட்டுமே தனியாக சுமந்து விட முடிவதில்லை..
மனமொத்த தம்பதியினராய் நீங்கள்
ஒருவருக்கொருவர் வைத்த நம்பிக்கையின்
வெற்றி இந் நந்நாள்!
25ஆவது திருமணநாள் உங்களை் போலவே
அதிர்ஷட்டமாய் அமைய வாழ்த்துக்கள்!

என் வாழ்நாளில் உங்களைப் போன்ற
காதல் நிறைந்த தம்பதியரைக் கண்டதில்லை…
காதலிக்க வயதில்லை என்பதை
உங்களிடமே உணர்ந்தேன்…
உங்கள் 25ஆவது திருமணநாளில் எல்லா
சந்தோஷங்களும் கிடைக்க வேண்டுகிறேன்!
இனிய 25ஆவது திருமணநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் வாழ்நாளின் மைல்கல்
இந்நாள்! நீங்கள் அற்புதமான தம்பதியினர்!
இறை ஆசியோடு இன்னும் நீண்ட தூரம்
பயணித்திட 25ஆவது திருமணநாள் நல்
வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி!

நேற்று நடந்து முடிந்த திருமணம் போல்
ஒவ்வொரு திருமண நாளிலும்
திகட்ட திகட்ட உன்னைக் காதலிக்க
வேண்டி மனு ஒன்றை இறைவனிடம்
வைத்தப்படி வாழ்த்துகிறேன்…
என் அன்பு கணவனுக்கு
திருமணநாள் வாழ்த்துக்கள்!

உன் சிறு சந்தோஷங்களையும்
நம் காதலிற்காய் அர்ப்பணித்து
என்னை கரம் பிடித்த என்னவனுக்கு
இனிய திருமணநாள் உரித்தாகட்டும்!

நான் என்னை மறந்தாலும்
உ்ன்னை மறவாதிருக்க
வரம் ஒன்று வேண்டும்!
வாழ்வின் கடைசி நொடி வரை
உன்னோடு மட்டுமே
இருந்திட வேண்டும்!
பல வண்ண கனவுகளையும்
உன்னோட இணைந்தே
கண்டிட வேண்டும்!
இன்றைய திருமணநாள்
பொன்னானதாய் அமைய
வாழ்த்துகிறேன்!

என் குறைகளை ஏற்று
என்றும் என்னுடன் இருப்பவனே
உன் நலத்திற்கும் நீடித்த ஆயுளுக்கும்
உன்னவளின் மனமார்நத பிரார்த்தனைகளும்
திருமணநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

தோழனாய் அறிமுகமாகி
காதலாய் கரம்பிடித்து
மனைவி எனும் அந்தஸ்த்தை
தந்தவனே!
நம் திருமணநாளில் இன்னும் பல
நினைவுகளை சேகரித்திட
மனைவி இவள் வாழ்த்துக்கள்!

தோழியாய் என்னை கொண்டாடியவனே!
என் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவனே!
என்றும் உனக்கே உனக்கானவளாய்
திருமணநாள் வாழ்த்துக்களை
கர்வத்துடனே சொல்லிக் கொள்கிறேன்!

வாழ்க்கையின் அனைத்து சந்தோஷங்களையும்
நீ பெற வேண்டும்!
வெற்றி வாகை நீ சூட வேண்டும்!
உன் இனியவளின் புது வேண்டுதல்
நம் திருமண நாளிலே!
என் மனதைக் கொள்ளைக் கொண்ட
என் காதல் கணவனுக்கு
திருமணநாள் விஷேடமாக அமைய
வாழ்த்துகிறேன்!

wedding anniversary wishes for uncle and aunty tamil

ஒவ்வொரு வருடமும் நம்மை
சந்தித்து செல்லும் இனிமையான சாரல்
திருமண நாள்!
இதோ இந்த வருடமும்
அன்றைய நினைவுகளை
நமக்கான நாளை மீட்டிப் பார்த்திட
வந்துள்ள திருமண நாளை
சேர்ந்தே வரவேற்போம் என்னவனே!
திருமணநாள் வாழ்த்துக்களும்
பிரார்த்தனைகளும்!

உன் காதலுக்கு நான் மட்டுமே சொநதக்காரி
பெருமையுடன் ஊர்மெச்ச
நம் இதயங்கள் இட்ட முடிச்சு
அவிழாமலே இருக்கட்டும்!
திருமணநாள் வாழ்த்துக்களை
உனக்காக பதிவு செய்கிறேன்!

வான் நீளத்துக்கு நம் காதலும்
பரவிக் கிடக்க வேண்டும்!
என்னை விடவும் உன்னை நேசித்திட வேண்டும்!
வருடங்கள் கடந்த பின்னும் நம் காதல்
அழயாமல் இருந்திட வேண்டும்!
என்னவனே! என்றும் நீ எனக்கானவனாய்
மட்டுமே இருந்திட வேண்டும்!
இதுபோல் பல திருமண நாட்களை சேர்ந்து
கடந்திட வேண்டும்!
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

உறவுகளின் எதிர்ப்பை மீறி
என் மீதான நம்பிக்கையில்
என்னோட கரம் கோர்த்தவளே!
நீ என்னுடன் எந்நாளும் வேண்டுமே!
என் இனியவளுக்கு
திருமணநாள் வாழ்த்துக்கள்!

marriage quotes tamil

எனக்காய் நீ சகித்துக் கொண்ட
இன்னல்கள் ஏராளம் என் அன்பே!
தவமின்றி கிடைத்த வரமடி
நீ எனக்கு!
என்னோடு சேர்த்து என் குடும்பத்தையும்
ஏற்றுக் கொண்டவளுக்கு
இத்திருமணநாள் இன்னும்
இனிமையாகட்டும்!

என்னுடன் நீ பேச மாட்டாயா?
என காத்திருந்த நாட்கள்
என்னுடன் மட்டுமே இனி
அதிகம் பேசிடுவாளென மாறிப் போனது
நம் திருமணத்தில்!
என் மனதிற்ககு இனியவளுக்கு
திருமணநாள் அற்புதமாய் அமைந்திட
வாழ்த்துக்கள்!

சொந்தங்கள் கூடி
அக்னி சுற்றி
பெரியார் ஆசி பெற்று
ஊர் வாழ்த்த
இணைந்த சொந்தமே!
திருமணநாள் வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்!

அழகுப் பதுமையொன்று
என் பக்கத்தில் தலைகுனிந்து
அமர்ந்திருந்த அந்நாளை
என்னால் எப்படி மறந்திட முடியும்?
என் அன்பு மனைவிக்கு
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!

இல்லத்தரசியாக என் வீட்டிற்குள்
காலடி வைத்தவளே!
எப்போது என தெரியாமலே
என் இதயத்திலும் சேர்ந்தல்லவா
நுழைந்து விட்டாய்!
என் இதயத்தில் ராணியாக
முடி சூடிக் கொண்டவளுக்கு
திருமணநாள் வாழ்த்துக்கள்!

இரவின் இருளில் மலை மேல் ஒளிரும் தீபம் போல்
இன்னல்கள், இடர்பாடுகள் தாண்டி ஒளிந்து வளரட்டும் உம் வாழ்வு!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

அழகிய செவ்வானத்தில்
புதிதாய் தோன்றிய வானவில் போல்
வண்ணமயமாகட்டும் உங்கள் வாழ்க்கை!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

Wedding Anniversary Wishes for Husband & Wife
தாளமின்றி இசை இல்லை
என் தாளமாக நீ இருப்பதனாலேயே,
இசையாய் நான் ஒலிக்கிறேன்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

நேற்று நடந்தது போல் இருக்கிறது
நீ என் கரம் பற்றிய அந்நாள்;
நாட்கள் நகர நகர
கோர்த்த கரங்களின் நெருக்கம் கூடித்தான் போகிறது.
வருடங்கள் கடக்கட்டும்;
வயது தேயட்டும்;
இருந்தும் அழகாய் ஆழமாகிறது நம் உறவு.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

Happy Wedding Anniversary Wishes in Tamil

யாரோவாய் இருந்து
இன்று நானே ஆகிபோனாயடா!
என் பெயரில் நுழைந்து,
உயிரில் நுழைந்த
என்னுள் பாதிக்கு
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.”
ஆனந்த லயத்தில் இருந்த போது இறைவன்,
உன்னை எனக்கென எழுதி வைத்தான்.
என் வாழ்வில் ஆனந்தத்தை பிரசவிக்கும் வரமாய்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

ராகம் நீ; தாளம் நான்;
ஸ்ருதி நீ; லயம் நான்;
ஸ்வரம் நீ; மொழி நான்;
என்றென்றும் ஓங்கி ஒலிக்கட்டும் நம் சங்கீதம்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

சின்னஞ் சிறிதாய் இருந்த என் இதய தெப்பத்தில்
பெரும் அருவியாய் பாய்ந்து,
வற்றாத ஜீவ நதியாய் ஆக்கிவிட்டாய் என் இதயத்தை.
நதிமூலமும் நீயே; கடல் சங்கமும் நீயே!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

நிலத்தின் பொறுமையும்,
நீரின் இனிமையும்,
காற்றின் குளுமையும்,
நெருப்பின் தூய்மையும்,
ஆகாயத்தின் விசாலமும் பெற்று
சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகள்.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

மலரும் மணமும் போல்
குழலும் இசையும் போல்
நிலவும் குளுமையும் போல்
தமிழும் இனிமையும் போல்
இருவரும் ஒன்றிக் கலந்து, சேர்ந்து வாழ வாழ்த்துகள்.
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

Tamil Wedding Quotes

மணக்கும் மல்லிகையாய்
மயக்கும் மரிக்கொழுந்தாய்
செழிக்கும் செண்பகமாய்
அனைத்து வளங்களும் இணைந்து
உங்கள் குடும்ப கதம்பம் மணம் கமழ வாழ்த்துகள்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

வாழ்க்கை ஊஞ்சலை அசைக்கும் தென்றலாய் நீயும்,
தாங்கும் கயிறாய் அவரும்,
நீடூடி பல்லாண்டு வாழ வாழ்த்துகள்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

தூரிகை தெரிக்கும் வண்ணங்களாய்
ஜொலிக்கிறது என் வாழ்க்கை-
என் ஓவியன் நீயானதால்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

நானும் தாயானேன்!
இதயத்தில் கருவுற்று இருக்கிறேன் நான்;
என் இதய கருவறையில் நீ!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

வாழ்க்கை ஒரு மலையேற்றம்.
இதில் என் இரு கால்கள் போதாதென்று
ஊன்று கோளாய் உன்னை தந்தான் இறைவன்.
ஒவ்வொரு அடியிலும் என்னை தாங்கி நிற்கும் துணையே,
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

Beautiful Wedding Anniversary Wishes in Tamil

வாழ்க்கை பயணத்தின் சக பயணியாய் வந்தாய்,
உன்னோடு பயணிக்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதும்
கண் குளிரும் காட்சிகளே ஏராளம், ஜன்னல் ஓரம்.
பயணத்தை செலுத்த நீ இருக்கையில்
எங்கே வரும் அலுப்பும், சலிப்பும்?
இன்னும் நூறாண்டுக் காலம் பயணிக்கவும் ஆவல் – உன்னுடன்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!

உல்லாச வானில் சிறகு விரித்த சிட்டுக் குருவிகளாய்
இருவரும் ஆனந்தமாய் வட்டமிட்டுச் சுற்றிவர வாழ்த்துகள்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

வண்ண மலர்களின் சுகந்தங்கள் கமழும் நந்தவனமாய்
உம் வாழ்க்கை பூத்துக் குலுங்கட்டும்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

இந்நன்னாளில் சகல ஐஸ்வர்யங்களும்,
வானம் விரித்த மலைச் சாரலாய்
பொழிந்து உங்களுக்கு ஆசி வழங்கட்டும்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

Tags: திருமண வாழ்த்துகள் கவிதைகள், Marriage Anniversary Quotes in Tamil, Anniversary Quotes Tamil, Anniversary Kavithai in Tamil, Wedding Anniversary Quotes Tamil Words, Happy Anniversary Quotes in Tamil, Happy Wedding Anniversary Wishes Tamil Kavithai, Wedding Anniversary Tamil Kavithai, Wedding Anniversary Wishes in Tamil Words, Marriage Wishes in Tamil, Wedding Anniversary Status Images in Tamil, திருமண நாள் வாழ்த்து, wedding anniversary wishes in tamil words. Tamil Wedding Anniversary Wishes, wedding anniversary wishes to wife in tamil messages, appa amma wedding anniversary quotes in tamil,

best wedding hashtags for Instagram

Leave a Comment