Life Quotes in Tamil: In this article you will find வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள், Valkai Thathuvam Kavithaigal, சிறந்த வாழ்க்கை தத்துவம் கவிதை and many more poem, kavita, quotes, status in Tamil language words text.

Life Quotes in Tamil
வாய்ப்பு என்பது
பறித்துக் கொள்வதில்லை,
திறமையால் நாம்
தேடிக்கொள்வது..!
திறமையில் கவனம்
செலுத்து வாய்ப்பு
உன்னைத் தேடி வரும்..!
கடுமையான
கஞ்சத்தனம்,
தகுதியற்ற தற்பெருமை,
எல்லையற்ற பேராசை
ஆகிய மூன்றும்
மனிதனை
வீணாக்கி விடும்..!

Valkai Thathuvam Kavithaigal
எதுவும் புரியாத போது
வாழ்க்கை தொடங்குகின்றது
எல்லாம் புரியும் போது
வாழ்க்கை முடிகின்றது..!
பணம் படைத்திட்ட போதும்
செல்வம் செழித்திட்ட போதும்
செருக்கோடு வாழாது உன்
சுற்றம் போற்ற வாழு

ஏழையாய் ஆனாலும் பெரும்
செல்வந்தனாய் ஆனாலும்
பிறருக்காக வாழ்ந்திடேல்
பெரு மனிதனாய் போற்றப்படுவாய்
அர்த்தமுள்ள வாழ்க்கைதனை
வாழ்ந்திட்ட ஒரு மனிதன்
மகானாய் போற்றப்படுவான்
இதுவே உலகத்தின் நியதி

உன் தவறை நீ
உணர்ந்து கொண்டு..
நீ அமைதியாகும் போது
தாழ்வதில்லை..
உயருகிறாய்..!
பிறந்து விட்டோம்
என்று நினைத்து
வாழாதீர்கள்..! இனி
பிறக்க போவதில்லை
என்று நினைத்து
வாழுங்கள்..!

Tamil Life Quotes
என்ன நடக்குமோ
ஏது நடக்குமோ என்று
யோசித்துக்
கொண்டிருப்பதை விட
முயற்சித்துப் பார்
கிடைத்தால் வெற்றி
இல்லாவிட்டால் அனுபவம்
இரண்டுமே வாழ்க்கைக்கு
தேவை தான்..!
வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்
உலகமே திரண்டு எதிர்திட்ட போதிலும்
உறவுகளே நம்மைப் பழித்திட்ட போதிலும்
உறுதியாய் நின்று ஜெயித்திடல் வேண்டும்

சாவிலும் இவ்வுலகம் எமை
சான்றோராய் போற்றிட
நல் மனிதராய் வாழ்ந்து
நானிலத்தை வென்றிடுவோம்
வாழ்க்கை எனும் பெரும் போரில்
நாம் அனைவரும் போர் வீரர்கள்
பல காயங்களை அடைந்து
வெற்றியை சுவைத்திடுவோம்

Life Quotes in Tamil Images
போராடிக் கிடைக்கும்
தோல்வி கூட கொண்டாட
வேண்டிய வெற்றி தான்
என்பதை என்றும்
நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்..!
நீ யோசிக்காமல்
எடுக்கும் முடிவுகள்
அனைத்தும் உன்னை
யோசிக்க வைத்துக்
கொண்டே இருக்கும்
வாழ்நாள் முழுவதும்..!

எதிர்பார்ப்பு இல்லாமல்
வாழக் கற்றுக்
கொள்ளுங்கள் அது தான்
வாழ்க்கையில்
சந்தோசத்தை
உருவாக்கும்..!
வாழ்க்கை எனும் பூந்தோப்பில்
பூக்களும் முட்களும் உண்டு
பல வலிகளைக் கடந்தாலே
பூக்களை கொய்ய முடியும்

வாழ்க்கை பற்றிய கவிதை
மானிடராய் பிறப்பதற்கே நல்
மாதவம் செய்திடல் வேண்டும்
மனித வாழ்க்கை போல
மகத்தானது எதுவுமில்லை
ஒவ்வொரு நீண்ட இரவுகளும்
விடிகின்ற வேளையிலே
நமக்கொரு சேதி சொல்லிடும்
நலம் பெற்று நாம் வாழ
தொலைதூர பார்வையோடு
கண நேரத்தையும் வீணடிக்காது
குறிக்கோளுடன் வாழ்பவனே
வெற்றிக்கனியை சுவைத்திடுவான்

தவம் போன்ற வாழ்க்கையை
தன்னம்பிக்கையோடு போராடி
தான் எனும் அகந்தையின்றி
தனித்துவமாய் வாழ்ந்திடுவோம்
தள்ளாடும் வயது
வரும் முன்பு தனக்கென
சேர்த்துக் கொள்..,
தனித்து விட்டாலும்
தளராமல் தன்மானத்தோடு
தலை நிமிர்ந்து வாழலாம்..!

வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்
ஒவ்வொரு பொழுதும்
உன் தேவைகளை நீயே
நிறைவேற்றிக் கொள்
சக மனிதர்களை நம்பி
வாழாதே..! ஏதோ ஒரு
சந்தர்ப்பத்தில் அவர்களின்
சுயரூபம் வெளிப்படும்
போது மனம் உடைந்து
சிதறி விடுகின்றது..!
கண்ணீரின் மொழி அழுத
கண்களை உடையவனும்
மட்டுமே தெளிவாக
புரியும்..!

நீ தேவைப்படும் போது
தேடப்படுவாய் அது வரை
அமைதியாக காத்திரு..!
மரணம் வரையில்
நினைவில் வைக்க
வேண்டியவை.. மாறும்
குணம் உடையவர்கள்
மனிதர்கள்..!

வாழ்க்கை கவிதை வரிகள்
எதுவும் இல்லாமல் பிறந்து
எல்லாம் வேண்டும் என அலைந்து
எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து
உயிரும் சொந்தமில்லை என உணர்ந்து
உலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான்
வாழ்க்கை
வர்ணங்கள் நிறைந்த வானவிலாய்
பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாய்
பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாய் பல
அனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை

பட்சிகளும் பூச்சிகளும்
புட்களும் பதர்களும் பெற்றிடாத
புனிதமான வாழ்க்கைதனை
பெருமாந்தர்கள் பெற்றிடுவார்
Read More: love quotes in Tamil
இன்பம் வரும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்யாதே..!
அது போகும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்..!

வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்
யாருக்கும் உன்னை
பிடிக்கவில்லை
என்றால் நீ
இன்னும் நடிக்க
கற்றுக் கொள்ளவில்லை
என்று அர்த்தம்..!
நீ மற்றவர்களால் தூக்கி
எறியப்படும் ஒவ்வொரு
பொழுதும் காகிதமாக
விழாதே..! விதையாக
எழு மீண்டும்
முளைக்க..!

வாழ்க்கை எனும் புத்தகத்தில்
அனுபவங்கள் பல உண்டு
ஒவ்வொரு அனுபவங்களும்
ஒவ்வொரு பக்கங்களாய்
அரிது அரிது இவ்வுலகில்
மானிடராய் பிறத்தல் அரிது
மானிடாராய் பிறந்திட்டேல்
மனிதத் தன்மையோடு வாழ்தல் சிறப்பு
உன் வாழ்க்கை கவிதை
உதிரும் மரங்களும்
பின்பு துளிர்விட்டு தளைத்தெழும்
துன்பங்களை தொடமல் யாரும்
இன்பங்களை அடைய முடியாது
பட்டை தீட்ட தீட்ட
வைரம் பொலிவாகும்
தடைகளை தாண்ட தாண்ட
உன் வாழ்க்கை பலமாகும்

இரவுபோய் பகல் வருவதை போல்
பிறப்புண்டேல் இறப்புண்டு
இயன்றவரை உத்தமராய்
இறுதிவரை வாழ்ந்திடுவோம்
சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.

எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்
மகான் போல வாழ
வேண்டும் என்று
அவசியம் இல்லை..
மனசாட்சிப்படி
வாழ்ந்தால் போதும்..!
வாழ்க்கை மிகவும்
சுவாரசியமானது..!
இன்று நீங்கள்
அனுபவிக்கும் மிகப்
பெரும் வலிகளே
நாளை உங்களின்
மிகப் பெரும் பலமாக
மாறிவிடுகின்றது..!

நாம் வாழ்ந்தாலும் ஏசிடும்
துவண்டு வாழ்ந்தாலும் ஏசிடும்
வையகம் இதுதானடா அன்று
பாடினான் ஓர் கவிஞன்
பெரு வெள்ளம் வந்திட்ட போதும்
சிறு துளியென எண்ணி
சிந்தை கலங்காது எப்போதும்
சிறப்புடன் கடந்திட்டல் வேண்டும்

வாழ்க்கை தத்துவம் கவிதை தமிழ்
இன்பம் வரும் போது போற்றி
துன்பம் வரும் போது தூற்றாதே
இன்பத்தையும் துன்பத்தையும்
சரிசமமாய் கருதி வாழு
கிடைத்தற்கரிய அருங் கொடையாய்
கண்டெடுத்த பெரும் புதையலாய்
அளிக்கப்பட்ட இவ் வாழ்க்கையை
ஆனந்தமாய் அனுபவித்திடுவோம்

முயற்சிக்கு முன்னால்
கேலிகள், கிண்டல்கள்,
துரோகங்கள், சோகங்கள்,
காயங்கள், சோதனைகள்,
தோல்விகள் யாவும்
தோற்று ஒரு நாள்
மாய்ந்து மடியும்..!
வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் –
உங்கள் உடல்நலம், உங்கள்
பணி மற்றும் நீங்கள் விரும்பும் நபர்கள்.
வாழ்க்கை உள்ளே இருந்து.
நீங்கள் உள்ளே மாறும்போது,
வாழ்க்கை வெளியில் மாறுகிறது

திறமை உங்களுக்கு இல்லாதது ஆசை,
சலசலப்பு மற்றும் 110% எல்லா
நேரத்திலும் கொடுக்கப்படலாம்
நாங்கள் உட்கார்ந்திருக்கும்போது அச்சங்களை
உருவாக்குகிறோம். நாங்கள் அவர்களை செயலால் கடக்கிறோம்
உங்கள் வாழ்க்கை தற்செயலாக மேம்படாது,
மாற்றத்தால் அது சிறப்பாகிறது.
உங்கள் கண்களை நட்சத்திரங்களிலும்,
உங்கள் கால்களை தரையிலும் வைத்திருங்கள்.

வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.
சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்.
பலர் அதையும் கேட்பதில்லை.
வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது.
சிலவற்றை சந்தோஷங்களாக.
சிலவற்றை சங்கடங்களாக.
பிரபல்யமும், செல்வமும்
கடல் நீரைப் போன்றது…!
அதனைக் குடிக்கக் குடிக்க
தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு
குறைத்துக் கொள்கிறோமோ…
அவ்வளவுக்கு அவ்வளவு
மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்…

விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்…
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்…
இவை தான் மனிதனின் எண்ணங்கள்…!
பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்
என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்.
ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.
பழிவாங்குதல்
வீரம் அல்ல, மன்னித்து
அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்…
பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது.
பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது.
அதேபோல் தான்.
நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.
நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும்.
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்.
ஆனால் எதுவும் மறந்து போகாது…!
ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும்.
உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை
ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.
காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை.
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே…!
அனைவர்க்கும் இனிமையாக இருக்க
அந்த இறைவனானாலும் கூட முடியாது.
அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும்
இருக்க முயற்சி செய்…
எந்த செயல் செய்தபோதிலும்
திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்.
உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம்.
வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்.

வாழ்க்கை என்னும் நதியின்
இருபுறமும் இருப்பது
கரை என்னும் நம்பிக்கை…!
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை…!
கொடுப்பது சிறிது என்று தயங்காதே.
வாங்குபவர்க்கு அது பெரிது.
எடுப்பது சிறிது என்று திருடாதே.
இழப்பவர்க்கு அது பெரிது.

தத்துவம் தன்னம்பிக்கை
வாழ்க்கை ஈசி
நம் பலவீனத்தை
உணர்ந்து கொண்டால்
வாழ்வது
வாழ்க்கையில்
அதிகம் பேசாதீர்கள்
இல்லையெனில்
வேண்டியவருக்கு கூட
வேண்டாதவர்கள் ஆகிவிடுவீர்கள்
யாரை போலவும் இல்லாமல்
இது தான் நான் என்று
தன் இயல்பு மாறாமல்
வாழ்வதும் ஒரு வகையில்
வாழ்நாள் சாதனை தான்

பல கடினமான
சூழ்நிலைகளுக்குப் பிறகு
ஈட்டிய வெற்றியை
நினைத்து பார்ப்பதை விட
கடந்து வந்த
கடினமான பாதைகளை
நினைவில் வைத்து செயல்படு
சுலபமாக வாழ்க்கையை
எதிர் கொள்வாய்
தனியாக இருக்கும்போது
சிந்தனையிலும்
கூட்டத்தோடு இருக்கும்போது
வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும்
நேற்றைய நினைவுகளை
நினைத்துஎண்ணி…!
நாளைய கனவுகளில்
மூழ்கி…!
வாழும் வாழ்வின்
ஒவ்வொரு நொடி
சந்தோஷத்தையும் இழக்காதே…!

Life Quotes in Tamil language
கடின உழைப்பும்
எவ்வித முயற்சியுமின்றி
எளிதாக எல்லாம்
கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள்
ஒரு போதும் வாழ்வில்
வெற்றி பெற இயலாது
வாழ்க்கை
ஒரு விசித்திரமான பரீட்சை
அடுத்தவரை பார்த்து
காப்பி அடிப்பதால்
தான் பலர்
தோல்வி அடைகிறார்கள்
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித் தாள்கள்
எதிர் பார்ப்பதை விட
எதிர் கொள்வதைக்
கற்றுக் கொள்ளுங்கள்
இங்கு எதிர்பார்க்கும்
வாழ்க்கை
கிடைப்பது இல்லை
எதிர் கொள்ளும்
வாழ்க்கையே கிடைக்கிறது

பேசிக்கொண்டே இருக்காதிர்கள்
வெகுசீக்கரமே வெறுக்கப்படுகிறார்கள்
மெளனமாக காத்திருங்கள்
அதிகமாக தேடப்படுகிறார்கள்…
உதிக்கும் போதும்
மறையும் போதும்
ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வந்தால்
திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல
மனிதனின் வளர்ச்சியும் கூட
ஏதோ ஒன்றுக்காக
காலம் நம்மை
காக்க வைத்துக்
கொண்டு தான் இருக்கிறது….

கோபம் எனும்
இருட்டில் விழுந்து⚡
விடாதே
பிறகு பாசம்
எனும் பகல்
கண்ணுக்கு 💥
தெரியாது…
Tamil Quotes about life
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது
வாழ்க்கை புத்தகத்தில்…
உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு…
நேற்றைய நினைவுகள்
பயனற்றது….
நாளைய நிகழ்வுகள்
கேள்விக்குறியே….
இன்று மட்டுமே
நிஜம்…
ரசித்து கடப்போம்
ஒவ்வொரு நொடியும்…

தவறுகள் மட்டும் தண்டனைக்குரிய குற்றம் அல்ல
நேசிக்கும் மனதை அலட்சியம் செய்வதும்
அலைக்கழிப்பதும் கூட
தண்டனைக்குரிய குற்றம் தான்…
ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட…
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது…
எதையும்
ஏற்றுக்கொள்ளும் போது
மனம் இலகுவாகிறது
உடைந்த கண்ணாடி போல்
ஒட்டவைக்க முடிந்தும்
முடியாமல் போகிறது சில உறவுகளை…
தமிழ் லைப் Quotes
அனைத்துக்கும் காரணம்
தேடிக்கொண்டிருந்தால்
வாழ்க்கையை ரசிக்க
முடியாது
அதிக உரிமை
எடுக்காதே
கொடுக்காதே
ஒருநாள்
வெறுப்பாய் வெறுக்கபடுவாய்…
நம் கண்ணீரை நம் கையே
துடைத்துக்கொள்ளும்போது
மனம் தெளிவான முடிவுக்கு
வந்துவிடுகின்றது….
நான்
ரசித்த
முதல் இசை
தந்தையின்
இதயத்துடிப்பு…
உழைப்பிருந்தால் தான்
வீட்டிலும் உனக்கு மதிப்பிருக்கும்…
பிடித்தவர்களின்
நிராகரிப்பும் அலட்சியமும்
வலியை கொடுத்தாலும்
அழகிய வாழ்க்கைக்கான
வழியையும் காட்டுகிறது….
வானவில் வாழ்க்கையில்
மின்னலை போல்
வந்து போகும் கனவுகள்
Tamil Life Quotes and SMS
கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
வைரக்கல் மங்கி விடுவதில்லை…
எண்ணங்கள் அழகானால்
வாழ்க்கையும் அழகாகும்…
நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால் அனைத்தையும் கடந்து போகலாம்…
எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்…
உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே வாழ்ந்துக்காட்டு உன்னை தேடிவருமளவுக்கு…
தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு
இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்
என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு
ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை…
நம் பயம் எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன்
எப்போதும் ஜெயித்ததில்லை…
இழந்ததை மறந்து விடு
இருப்பதை இழக்காமல் இருக்க
சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது
புரியாத கவிதையும்
கலையாத கனவும்
அழகு தான்…
தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்
உள்ளங்கள் சுருங்காமல்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்
ஓர் அழகிய காதல்
வாழ்ந்துக்கொண்டிருக்கு…
அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி…
விளையாட்டாக
எடுத்துக்கொள்ளும்
விசயங்களில் தான்
அதிக. தோல்விகளை
சந்திக்கின்றோம்…
Positive Life Quotes in Tamil
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி…
இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்
அடுத்தவர்களை பாராட்டும்
போது அவர்களின் மனமும்
குளிரும் நம் மனதிலுள்ள
பொறாமை குணமும் அழியும்
சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது
ஓலை குடிசையில்
பிறந்தான் மகன்
கோடீஸ்வரன்
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை
போராடி வாழ்வதற்கு வாழ்க்கை
ஒன்றும் போர்க்களமல்ல அது
பூ வனம் ….
ரசித்து வாழ்வோம்….
அரசியலை போல்
தான் வாழ்க்கையும்
பல எதிர்பார்ப்புகளை
கொடுத்து ஏமாற்றுவதில்…
மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு…
அழ நினைத்தால் ஆசைதீர
அழுதுவிடு கண்ணீரின் முடிவில்
சுமைகளும் கரையுமென்றால்…
வாழ்க்கைல எல்லாமே ஈஸியா கிடைச்சா சுவாரஸ்யம் இருக்காது
போராடி கிடைக்குற வெற்றிக்கு எப்பவுமே மதிப்பும், ருசியும் அதிகம்
வாழ்க்கையில நம்பிக்கை பலமாக இருக்கட்டும்
அதுவே முன்னேறத்திற்கு
பாலமாக அமையும்…
முடிவுகளை தயங்காமல்
எடுக்கும் திறன்
நம்மிடம் இருந்தால்
முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கும்
ஒரு சிறந்த புத்தகம்,
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம்…
புத்தகங்களை திறந்து வைப்பின்…
ஜன்னலை போன்றே,
நல்ல காற்றாக,
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க…
(வாசித்தல் – அவசியமாக)
சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள்…
மனதில் கவலை
இருப்பினும்,
அகம் போல,
முகமும்
“அழகு”
பெறும்…
(தனித்தன்மையாக)
தடுக்கி விழும்போது
தூக்கிவிட யாரும்
வரவில்லை என்றாலும்,
நிமிர்ந்து சீராக நடக்கும்போது
தடுக்கிவிட யாராவது
ஒருவராவது வருவார்கள்…
(கவனம்)
பேச்சில் சுதந்திரம் வேண்டாம்
தேவையானவற்றை பேசி
தேவயற்றவையை வீசி செல்
பேச்சில் கட்டுப்பாடுத்தான்
வேண்டும்
சிறந்த வாழ்க்கை கவிதைகள்
எழுதி விடு…
தலையெழுத்தையும்
சேர்த்து…
உன் விருப்பப்படியே…
உன் வாழ்க்கை
உன் கையில்
இவ்வுலகில்
நம்மை அடுத்தவர்கள்
உடன் ஒப்பிட
வேண்டாம்
நாம் விலை
மதிக்க முடியாதவர்கள்
என்ற எண்ணத்தோடு
அடி எடுத்து வைத்தால்
வாழ்க்கை சந்தோஷமாக கழியும்
வாழ்க்கை என்பது
எதிர்காலத்துக்கான
போராட்டம் அல்ல
வாழும் தருணங்களை
உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது
கடந்தகாலத்தை நினைத்து
வருந்துவதை விட
எதிர்காலத்தை எதிர்கொள்வது
சாலச்சிறந்தது
நமக்கு
பிறர் தரும் வலிகள்
புதிய அனுபவங்களை
கொடுத்தாலும் அவரால்
நாம் அனுபவித்த வலிகள்
வடுக்களாக எப்போதும்
நீங்காமல் நினைவு படுத்திக்
கொண்டே இருக்கும்
வலிகள் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
வலிகளை தாங்காமல்
வாழ்க்கையே இல்லை
நீங்கள்
தவறவிட்ட வாழ்வு
உங்களுக்கானது இல்லை
என்பதை
உறுதி செய்து கொள்ளுங்கள்
உங்களுக்கான வாழ்வு
என்பது
நீங்கள் வாழ்ந்து
கொண்டிருப்பது மட்டுமே
சிலர் உங்களை
மட்டம் தட்டுவார்
நீங்கள் உயர்ந்தபின்
அவர்களே கையும் தட்டுவார்
நீங்கள் உங்கள் பாதையில்
போய்க்கொண்டேயிருங்கள்
விமர்சிப்போரை விட்டுவிடுங்கள்
ஏனெனில் அவர்களுக்குப் பாதை
என்பதே கிடையாது
நீ சுயமாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்ததை
எல்லோரும் விரும்புகிறார்களா இல்லை
வெறுக்கிறார்களா என நினைத்து
ஒரு போதும் ஒரு போதும் கவலைப்பட தேவையில்லை…
காயங்கள் ஆற மாற
உன் மனமாற்றத்தால் மட்டுமே முடியும்…
உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட…
அவர்களை பாராமல் இருந்து பார்…
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்…!
உன் தேடல்களும்
எதிர்பார்ப்புகளும்
நியாயமானதாக இருந்தால்
நிச்சயம் உன்னை வந்தடையும் வந்தடைந்திருக்கும்…
வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள…
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்…
இன்பமோ துன்பமோ
அனுபவிக்கபோவது நீ ..எனவே
முடிவும் உனதாகட்டும்
பாசம் இருக்குமிடத்தில்
அதிகாரம் இருப்பதில்லை
அதிகாரமிருக்கும் இடத்தில்
அன்பு நிலைப்பதில்லை…
வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு
வலிகளை சுமந்து
வழியைத் தேடும் பயணம்
தான் வாழ்க்கை
வலி
வேதனை
ஏமாற்றம் எல்லாம்
வாழ்க்கையின் இறுதிக்கட்டமல்ல
வாழ்க்கையை புரிந்துக் கொண்டு
பயணிப்தற்கான முயற்சி கட்டம்
புயலுக்கும்
பூகம்பத்துக்கும்
இடையிலான புரியாத
போராட்ட பயணம்
தான் வாழ்க்கை
ஆரம்பத்திலே
புரிய வேண்டுமென நினைத்தால்
சுவாரஸ்யம் இருக்காது
நீர்க்குமிழியை போல்
வாழ்க்கை……
மறைவதற்குள்
ரசித்திடுவோம்
இன்று மனதிற்கு
வலிகொடுத்த நிகழ்வுகளை
எல்லாம் இருளோடு கரைத்திடுவோம்…
ஜெயிக்கும் வரையில்
தன்னம்பிக்கை அவசியம்,
ஜெயித்த பிறகு
தன்னடக்கம் அவசியம்.!
தன்னை நியாயப்படுத்தி
கிடைக்கின்ற எதற்கும்
ஆயுள் குறைவு தான்…
புரியாத பிரியங்கள் பிரிவுகளால்
முடிவை தரும்🙋🙋🙋
மனதில் உள்ள
சுமைகளை யாரிடமாவது
கூறி அம்மா ஆறுதல்
தேடிக்கொள்வார்….
ஆனால் அப்பா அத்தனை
சுமைகளையும் மனதிலேயே
சுமந்துக்கொண்டு எந்த சுமையும்
இல்லாததைபோல் காட்டிக்கொள்வார்
தொடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்க…
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கையை தேடி…
வாழ்க்கையில்
வலிகளை அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள்
சிறந்ததாகவே இருக்கும்…
நம்முடைய மனமும் உள்ளமும்
தெளிவாக இருக்குமானால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது…
கடந்து போன நாட்களில்
உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு
இனி கடக்கபோகும் நாட்களில்
அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்…
காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை…
மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை…
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்…
நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்
நம் தவறுகளை
நாம் உணரபோவதில்லை…
குறைகள் இருப்பது இயல்பு அதை
மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு
( கீதை)
மனம் விசித்திரமானது கிடைத்ததை
நினைத்து நிறைவடையாது கிடைக்காததை
நினைத்து தவிக்கும்…
இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்…
அம்பினால்
பட்ட காயம் ஆறும்
அன்பினால்
பட்டகாயம் ஆறாது
தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை
எது நடக்குமோ அது நடந்தே ஆகும்…
யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை…
இதயத்தில் குறையிருந்தால்
சரிசெய்ய பல வைத்தியர்கள்
உன் மனக்குறைக்கு
நீ மட்டுமே வைத்தியர்…
பிடித்ததோ
பிடிக்கலையோ
வேண்டுமோ
வேண்டாமோ
சகித்துக் கொண்டு
நாட்களைக்
கடத்த சொல்லித்
தருகிறது வாழ்க்கை
ஆயிரம் உறவுகள்
துணையாக இருந்தாலும்
வாழ்வை தனியாகத்
தான் எதிர்க்கொள்ள வேண்டும்
அவரவர் பாதை
அவரவர் பயணம்
அவரவர் மனம்
அவரவர் வாழ்க்கை
இஷ்டபட்(டு)ட
வாழ்க்கையை
அமைத்து கொண்டால்
கஷ்டங்களை வெளியில்
சொல்ல கூடாது
தூய்மையான எண்ணங்கள்
துணிச்சலான செயல்கள்
இவ்விரண்டும் எப்போதும்
இருப்பின் வாழ்க்கை சிறக்கும்
Life Quotes in Tamil
வாழ்க்கையில் எப்போதுமே
சந்தோஷமாக இருப்பது
ஒரு கலை
ஆனால் அதை
யாரிடமும்
கற்றுக் கொள்ள முடியாது
ஏமாற்றம்
வலியை தந்தாலும்
நல்வழியையும் காட்டும்
வாழ்க்கைக்கு
அழகிய காட்சியை
தேடாதீர்கள்
காணும் காட்சியை
அழகாக்குங்கள்
வாழ்க்கை அழகாகும்
வாழ்க்கையில்
பல வலிகள் உண்டு
அதே சமயம்
பல வழிகளும் உண்டு
ஆதலால்
தைரியமாய் நகருந்து
கொண்டே இரு
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை…
அடிக்கடி கண்ணீர் விட்டால்
உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது…
ஒளியை கண்டால்
ஓடிவரும் நிழல்
இருளிலும் உடனிருக்கும் நிஜம்…
மனம் அழகானால்
வாழ்க்கையும் பூவனமாகும்…
வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை…
தோல்வி உன்னை
வீழ்த்தும் போதெல்லாம்
குழந்தையாகவே விழு
மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க…
நம்பிக்கையா இருங்க
ஆனால் ஒருவருக்கு தெரியாமல்
இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதிங்க…
கல்லூரியிலும் கற்றுக்கொள்ள முடியாத
வாழ்க்கை பாடத்தை
சில இழப்புகள் கற்றுத்தருது…
கவலைகள் எல்லாம்
கனவைப்போல்
கலைந்துப்போக
வேண்டுமென்பதே
அனைவரின் கனவு
நம் தேடல்களில் ….
பல தேவையற்றவையே
கோபப்படவும் யோசித்ததில்லை
கோபம் தனிந்த பின்பு தானாக பேசவும்
தயங்கியதும் இல்லை
அன்னையின் அன்பில் மட்டும்…
காரணமில்லாமல் வரும்
கோபங்கள் நம் வளர்ச்சியை
தடுப்பதோடு மட்டும் இல்லாமல்
நெஞ்சத்தில் வஞ்சகங்களையும்
அதிகரிக்க செய்துவிடும்…
நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட…
நேரத்திற்கு தகுந்தாற்போல்
வாழ்பவர்களே நிம்மதியாய்
வாழ்கிறார்கள்…
வாழ்க்கை என்பது
மிகப்பெரிய
எதிர்பார்ப்புகளில் இல்லை
சின்னச் சின்ன
சந்தோசங்களில்
தான் வாழ்க்கை உள்ளது
என்றும் அன்புடன்…
வாழ்க்கையில் எது கிடைக்காமல்
போனாலும் பரவாயில்லை…
நம் மீது அன்பும் அக்கறையும் கொண்ட
சில உறவுகள் மட்டும் கிடைத்தால்
போதும்…
நல்லதொரு
மாற்றங்கள்
நம்மிடையே
தவறுகளை
திருத்தி கொள்ள
ஒரு வாய்ப்பாக
(தெளிவு)
சந்தோஷம் என்பது
அமைவதில்லை
நாம் தான் அமைத்து
கொள்ள வேண்டும்…
உன் வாழ்க்கையை நீ
உண்மையாக நேசி…
நிகழ்காலத்தை
சரியாக பயன்படுத்தி
கொண்டால்
எதிர்காலம்
நம்மை வரவேற்கும்…!
மிகச் சிறந்த தொகுப்பு