Here are the new updated Collection Tamil Kadhal Kavithaigal, Love Quotes in Tamil, Tamil Love quotes.
- Tamil Kavithai Love
- Tamil Kadhal Kavithai Sms
- காதல் கவிதைகள்
- Love Kavithai SMS
- Love Poem In Tamil
Tamil Kadhal Kavithaigal
மலர்களில்லாத
போதும்
ரசிக்க தூண்டுது
கிளைகளை
மனம்
நறுமணமமாய்
நீயிருப்பதால்
மனதில்

ஒரு விழிக்கு
தடை போட்டாலும்
மறு விழியில்
ரசிப்பேன்
இருவரி கவிதையாய்
உன் விழிகளை

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்
விட்டு விட தான் நினைக்கிறேன்
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது
உன் அழகான நினைவுகள்

இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்…!
– என்னை நோக்கி பாயும் தோட்டா

உன்னுடன் வாழ்ந்தால், என்
வாழ்க்கை நன்றாக இருக்கும்
என்பதல்ல என் காதல்! உன்னுடன்
மட்டும் தான் என் வாழ்க்கை
என்பதே என் காதல்!

உன் தேடல் என்றும் நானாக இருக்க
வேண்டும் என்பது காதலில்லை!
உன் தேடல் எதுவாக இருப்பினும்,
உன் வழித்துணையாய் என்றும்
உடன் வருவேன் என்பதில்
உள்ளது உண்மைக் காதல்!

என் உயிர் பிரியும் நேரத்தில்
கூட உன் உயிர் தேடி வருவேன்,
ஒரு நொடி உன் மடியில்
உயிர் வாழ!

அழகே உனது கண்களே
கவிதை எழுதும் போது,
உனது கைகளுக்கு
என்ன வேலை?

சில நேரங்களில் எனக்கே
ஒரு சந்தேகம், என் இதயம்
எனக்காகத்தான் துடிக்கிறதா? என்று!

பெட்ரோல் விலையை
போல்தான் என் காதல்
உன் மேல் தினமும்
அதிகரித்துக்
கொண்டே இருக்கிறது!

என் வலக்கையை,
உன் இடக்கையுடன் ஜோடி
சேர்த்து, சாலையின்
நீளத்தை, நம் காலடிகளால்
அளக்கலாம் வா!
Read More: Motivational Quotes In Tamil | Images

மெய் அன்பில் பேரரசனும்
சிறுபிள்ளையாவான், அவன்
காதலின் உயிரோவியத்தின் முன்!

இல்லை என்று உன் வாய்
சொன்னாலும், முணுமுணுக்கும்
உன் உதட்டோர சிரிப்பும்,
படபடக்கும் உன் கண் அசைவும்,
பட்டென காட்டுதடி
கண்மணியே உன் காதலை!

உயிரோடு இருக்க ஒரு பிறவி
போதும்! உன் காதலோடு இருக்க,
பல ஜென்மம் வேண்டும்!

மழையும் நீயும் ஒன்றுதான்!
சில நேரங்களில் என்னை
ஏமாற்றிவிடுகிறீர்கள்!

காதல் என்ற யுத்ததில் விரும்பி
தோற்றேன்! தண்டனையாய்,
அவள் இதழ்சிறை பெற!

ஓங்கப்பட்ட கை இறக்கப்பட்டால்,
அந்த உறவின் மீது உள்ள அன்பு
கோடிக்கணக்கானது!

எவ்வளவு பெற்றாலும்,
பற்றாக்குறையாகவே உள்ளது!
உனது அன்பும் காதலும்

ஒருமுறை மட்டும் நிரூபித்து
தெடருவதல்ல காதல்! மாறிக்
கொண்டே இருக்கும் மனித
சூழ்நிலைகளில், மாறாமல்,
மறக்காமல், குறையாமல்
இருப்பதைக் காட்டிக்கொள்ள
வேண்டிய நிரந்தர அன்பே காதல்!

விழுந்தால் மீள முடியாது என்று
தெரிந்தும், உன் கன்னக்குழியில்
விழ காத்திருக்கிறது என் காய்ந்த இதழ்கள்!

நேரங்கள் யாவும் கானல் நீர்
போல மறைக்கின்ற நேரத்தில்
மறையாதது உன் முகம் மட்டுமே!

எப்போதுமே அன்பாக பேசும்
உறவுகளை விட, அடிக்கடி
சண்டை போட்டு சமாதானம்
ஆகும் உறவுகளுக்குள் இருக்கும்
அன்பும், ஆயுளும்
ரொம்ப அதிகமாகும்!

சிந்திக்கும் முன்னே விழுந்தேன்!
சிந்தித்த பிறகு, என்னையே இழந்தேன்!

உன்னை சந்தித்த போது
சிந்திக்கவில்லை, இப்போது
சிந்திக்கிறேன் எப்போது
உன்னை சந்திப்பேன் என்று!

ஆயிரம் பேரைக் கடந்து சென்ற
பாதையில், என் மனதைக்
கொள்ளை கொண்டது நீ
மட்டும் தான்! இனி என்
வாழ்வும் சாவும் உன்னோடு
தான், உன்னோடு மட்டும் தான்!

நீ சொல்லும்
மிஸ் யூவில்
தொலைகிறேன்
நானும்…!
அலங்கரித்த போதும்
ஒளியிழந்து போனேன்
உன் பார்வை
படாததால்…!
காண்பதற்கு
தடைபோட்ட போதும்
மனதுக்கு தாழ்போட
முடியவில்லை
உள்ளம் உன்னையே
நினைக்குது…!
பெண்ணின் அழகை ரசிப்பதை காட்டிலும்
அவள் அன்பை ரசிப்பவனே ஆண்மகன்
அன்பான இதயத்தை
அழகாக பார்ப்பது தான் காதல்
இந்த உலகத்தில் நம்மை புரிந்து கொண்டவர்களை
தவிர வேறு எவராலும்
நம்மை நேசிக்க முடியாது
ஒருவரிடம் தங்கள் இதயத்தை தொலைக்கும் வரைக்கும்
காதலை யாரும் நம்புவது இல்லை
மழைச்சாரலாய்
நீ அன்பை
பொழிய
வாழவேண்டுமென்ற
ஆசையும்
துளிர்விடுகிறது
என் எண்ணங்களில்
உதயமான அழகிய
வண்ணங்களின் வானவில்லாய்
தான் என் காதல்
கரு மையும்
கவிதையாகும்
உன் கண்கள்
ரசித்தால்…!
பேச வந்த
வார்த்தையெல்லாம்
ஓசையின்றி போனது
உன் விழிமொழியில்
மயங்கி…!
என்னில் நீயாகி
உன்னில் நானாகி
நம்முள் நாமானோம்
எண்ணமெல்லாம்
நீயாக
வண்ணவுலகில்
நான்…!
நெற்றியில் நீ
திலகமிட
கண்ணங்களும்
சிவந்தது நாணத்தில்
உன்னில்
தொலைந்தபின்னே
புன்னகைக்கவும்
கற்றுக்கொண்டேன்
விண்ணில்
உலாவரும்
நிலவாய்
என்னுள் உலாவருகின்றாய்
நீ…!
என்னுலகமும்
முழுமையாகிறது
உன்னை அள்ளிக்கொள்ளும்
போது…!
மூச்சுமுட்டும்
நெருக்கத்தில்
இல்லாவிட்டாலும்
பார்வைபடும்
தூரத்திலேனுமிரு
என்னுயிர் வாழ…!
கற்பனையுலகும்
பிடித்துப்போனது
அதிலும்
நிலவைபோல்
நீயே உலா
வருவதால்
விட்டுவிட்டு துடிக்கும்
இதயமும்
விடாமல் துடிக்கின்றது
உன் தாமதத்தின்
காரணம் புரியாமல்
பூவோடு
சேர்ந்திருக்கும்
வாசத்தைபோல்
உன் நினைவோடு
சேர்ந்திருக்கு
என் சுவாசம்
மறக்க முடியாத
பிம்பம் நீ
தவிர்க்க முடியாத
நினைவும் நீ
நீயின்றி என் வாழ்க்கை
முடியப்போவது இல்லை
நீயின்றி வாழ்வு வந்தால்
நான் இருக்கப்போவதில்லை
என்னருகில்
நீயிருக்க
இருளேது
என் வாழ்வில்
பலமுறை துடித்தது
என் இமைகள்
உன்ணை பார்ப்பதற்கு
மட்டுமல்ல உன்ணை
என் விழிக்குள்
சேர்ப்பதற்கும்தான்
உன்
இம்சைகளும்
ரசணையே
நீயில்லா
நேரங்களில்
காத்திருந்த
கனமான நிமிடமெல்லாம்
காணாமல் போனது
கண்கள் உனைக்காண
விலகாத அணைப்பு
மௌனங்கள் பேசும்
காதல் கரைகின்ற இரவில்
தொடர்ந்திட வேண்டும்
இரவை
பல வண்ணங்கள்
அழகாக்கி
கொண்டிருந்தாலும்
உன்னை காணும்வரை
என்மனம் இருளே
எதையும்
ஆள வேண்டுமென்ற
ஆசையில்லை
உன் அன்பில்
ஆழ்ந்திருக்க
வேண்டுமென்ற
ஆசையை தவிர
சோலையில்
பூத்ததல்ல
உதிர மனச்சோலையில்
பூத்தது மரணம்வரை
மலர்ந்திருக்கும்
காதல் மலர்
நினைவே
நீயானபின்
மனதுக்கு
ஏது ஓய்வு
கரையோடு
உரையாடும்
அலைப்போல்
கடலிருக்கும்வரை
தொடர்ந்திட வேண்டும்
நம் உறவும்…!
உனக்காக
தவிப்பதுதான்
காதலென்றால்
சுகமாக ஏற்றுக்கொள்வேன்
காலமெல்லாம்…!
கையளவு
இதயத்திலேயே
சுகமாக சுமந்திருப்பவனுக்கு
கரங்களில் மட்டுமென்ன
சுமையாகவா
தெரியபோகிறேன்
எனக்குள்
தனிமையை
தவிடு பொடியாகி
விடுகிறது
உன் நினைவுகள்…
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து
நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
உன்னை
தேடி அலைந்திடும்
தேடலில் சுவாரஸ்யம்
குறையும் போது
உன் நினைவுகள்
என்னை தீண்டி
தேடலை அதிகப்படுத்துகிறது
உன்னை
மட்டும் அல்ல
உன் நினைவை
சுமப்பதும்
வரமே எனக்கு
ஒளியிழந்த
விழிகளுக்கும்
கனவை தந்தாய்
கலைந்துவிடாதே
இருண்டுவிடும்
என்னுலகம்
அன்பெனும் குழலை
வாசித்து பார்க்க
ஆசை அவன்
விழிகளில்
மௌனமாயிருந்தே
மனதை
கொள்ளையடித்தாய்
தொலைவில்
நீ சென்றால்
தொலைந்தே
போகின்றேன்
நானும்
உன் நினைவில்
பல சொந்தங்கள்
உனக்கிருந்தாலும்
உன்னிதயத்தின்
சொந்தம்
நானாகமட்டுமேயிருக்க
வேண்டும்
விலகியபோதும்
உன் நேசம்
இணைத்தது
நம் இதயத்தை
துளியாய்
கலந்துவிட்டாய்
மன கடலில்
உன்
தோள்சாய
சோகங்களும்
சொப்பனமாய்
கலையும்
வில்லின்றி
எய்தாய்
விழி அம்பை
துளைத்தது சுகமாய்
இதயத்தை
அடம்பிடிக்கும்
குழந்தையாய்
அடங்க மறுக்கின்றது
உன் நினைவு
தாமதித்து
தவிக்கவிடாதே
தாங்காது
இதயம்
எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்
உன் அன்பின்
பிரகாசத்தை
உணர்ந்தேன்
நீ எனக்காக
சேகரித்து தந்த
மின்மினியில்
கலங்கித்தான்
போகின்றது
கண்களும்
உன்னை
காணமலிருந்து
காணும்போது
கொண்டு
சென்றுவிடு
உன் நினைவுகளை
என்னை
கொன்று திண்கிறது
நானிருக்கின்றேனென்று
சொல்லாமல் சொல்லும்
உன் அரவணைப்பில்
உடைந்த மனமும்
நிறைந்தது
கண்ணோடு
நீயிருப்பதால்
என்னோடு
நீயில்லையென்ற
எண்ணமே
எனக்கெழுந்ததில்லை
மெல்ல மெல்ல
சாய்கின்றது
மனம் உன்பக்கம்
உன் விழிகளென்னை
வீழ்த்த…
எண்ணற்ற கவிதைகள்
எழுதினாலும்
உனக்காக கிறுக்கும்போது
மட்டுமே மனமும்
மகிழ்ச்சியில்
துள்ளிக்குதிக்கின்றது
குளத்தில் நீந்தும்
தாமரையைபோல்
மன ஓடையில்
நீந்துகின்றது
உன் நினைவு
வானவில்லிலும்
காணாத
அழகிய நிறம்
உன்னில் கண்டேன்
சிக்கெடுக்கும்போது
மனம் சிக்கிக்கொண்டது
நீ கூந்தல்
கலைத்து விளையாடும்
நினைவுகளில்…!
மொழியில்
பேசிடு விழியில்
பேசி வீழ்த்தாதே
உனக்கான காத்திருப்பில்
உணர்ந்தேன்
உன்னில் நான்
தொலைந்திருப்பதை
தூறல் போடும்
மழையில்
உன் நினைவின்
சாரலென்னை
நினைத்தே செல்கிறது
சேராது
இரு திசைகளென
தெரிந்தும்
தேடி தொலையுது
விழிகள்
நம் இருவருக்குள்ளும் புரிதல் என்ற ஒன்று புதிராய் இருந்தால் கூட இதயம் என்ற ஒன்றினால் நாம் இணைகிறோம் என்றென்றும் காதலுடன் …!