Tamil Kadhal Kavithaigal With Images

உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும்! உன் காதலோடு இருக்க, பல ஜென்மம் வேண்டும்!

எனக்குள் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே இருக்கிறது நீங்காத உன் நினைவுகள்.

நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ இப்பொது வரம் கேட்கிறேன் உன்னை பிரியாத வாழ்க்கை வேண்டும் என்று.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பேச துடிக்குது மனது! இணைய மறுக்குது உதடு!

நான் உன்னை காதலிப்பது உன்னோடு மட்டும் வாழ இல்லை உனக்காக மட்டும் வாழ

சில நேரங்களில் எனக்கே ஒரு சந்தேகம், என் இதயம் எனக்காகத்தான் துடிக்கிறதா? என்று!

எங்கு காதல் இருக்கிறதோ, அங்கு வாழ்க்கை இருக்கிறது.

பயப்படும் என் விழிகள் நம் விரல்கள் கோர்த்ததும் பயமறியாமற் போனதே!

நீ மௌனமாகும் போது என் கண்ணீர் பேசுகிறது

சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் போதுமடி

நினைப்பதை கொஞ்சம் நிறுத்திவை விக்கலில் சிக்கி தவிக்கின்றேன்

எத்தனையோ காதல்கள் என்மேல் எனக்கு உன்மீது மட்டுமே காதல்

காதல் என்ற யுத்ததில் விரும்பி தோற்றேன்! தண்டனையாய், அவள் இதழ்சிறை பெற!

என்னைப்பற்றிய கவலைகள் எனக்கில்லை அக்கறைக்கொள்ள நீயிருப்பதால்……

தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய் வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது…

வாடிய மனம் வானவில்லானது
உன் வருகையை கேட்டு…

அதிக கோபம் கொண்டதும், அதை விட அதிகம் பாசம் கொண்டதும் உன்னிடம் மட்டுமே!

ஓங்கப்பட்ட கை இறக்கப்பட்டால், அந்த உறவின் மீது உள்ள அன்பு கோடிக்கணக்கானது!

உனக்காகவே என் வாழ்க்கை என்று நீ சொன்னபோது தான் என்னை எனக்கே பிடித்தது…

விழித்துக்கொண்ட நினைவுகள் உறங்கும் போது விடியலும் வந்துவிடுகிறது…

கண்கள் வழியே இதயத்தை துளைத்து, என்னுள் வாழ்கிறாய் காதலாக!

முடியாத பயணம் நான் தொடர வேண்டும் உன் கரம் பிடித்து…

கண்களுக்குள் என்னவர் கனவே கலையாதே

என் வலக்கையை, உன் இடக்கையுடன் ஜோடி சேர்த்து, சாலையின் நீளத்தை, நம் காலடிகளால் அளக்கலாம் வா!

நீ வானவில்லாய் இரு நான் அதில் இருக்கும் ஏழு நிறமாய் இருப்பேன்..! என்றும் இணைப்பிரியாமல்…

உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே நாளும் இமைகள் மூடுதே!

மெய் அன்பில் பேரரசனும் சிறுபிள்ளையாவான், அவன் காதலின் உயிரோவியத்தின் முன்!

பெட்ரோல் விலையை போல்தான் என் காதல் உன் மேல் தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது!

மழையும் நீயும் ஒன்றுதான்!’ சில நேரங்களில் என்னை ஏமாற்றிவிடுகிறீர்கள்!