பெண்கள் கவிதைகள் வரிகள்: In this article you will find Pengal Kavithai In Tamil பெண்களின் முன்னேற்றம் and many more Kavita, quotes, status in Tamil language.

Pengal Kavithai In Tamil
இப்பூமியில் பிறக்கும் போதே பெண்கள் புரட்சியாளராகவே பிறக்கிறார்கள்.. பெண்களுக்கு இரு மனம் ஒன்று பூக்கடை மற்றொன்று சாக்கடை எனச்சொல்வதைக் கேட்டிருப்போம் ஆனால் இன்று பெண்கள் பிறக்கும் போதே சாதனை, சரித்திரம் படைக்கவும் பூவும் புயல் வீசும் எனக்காட்டவும் விதையிட்ட இடத்திலே விருட்சமாகவும் விளக்கொளியில் மடியும் விட்டில் பூச்சிகளாக இல்லாமல் விடியலைத்தேடும் வின்மீன்களாகவுமே பிறக்கிறார்கள்..
பெண்கள் ரோஜா செடி
போன்றவர்கள்.. கல்லும் இருக்கும்..
மண்ணும் இருக்கும்..
முள்ளும் இருக்கும்..
கல் கலையாவதும்..
மண் மணமாவதும்..
முள் முளையாவதும்.. பெண்களின்
கைகளிலே தான் உள்ளது..!

உயிரை பெற்று எடுக்கும்
பலத்தையே பெண்களுக்கு
கொடுத்த இறைவன்.. அழுகையை
பலவீனமாக கொடுத்து
அடிமையாக்கி விட்டான்..!
அழகென்றும்.. அறிவென்றும்..
கறுப்பென்றும்.. சிகப்பென்றும்..
அடையாளம் எத்தனை..?
அனைத்திலும் சிறப்பு பெண்மை..!

ஆண் என்ற அகங்காரம்
கொள்வதற்கு முன்னாள் யோசி.
முதலில் உன்னை ஒரு பெண்
பத்து மாதம் சுமந்து பெற்றாலே நீ ஒரு “ஆண் மகன்”.
எதை சொல்ல நான் இப்பெண்ணிடம் ,
புத்தம் பொலிவுற மின்னும் அவளின் மேனி அழகையா?
உள்ளம் கொள்ளை கொள்ளும் அவளின்
உடை அழகையா? பூக்கள் போல் புன்முறுவலுடன்
பூக்கும் அவளின் முக அழகையா?
காண்பதவரையும் காண வைக்கும்
அவளின் நடை அழகையா?
இல்லை இல்லை என்றுமே சிறந்த
நண்பனாக தோள் கொடுத்து, காதலியாக
என்னில் மூழ்கடித்து,
கணவனாக என்னை தேர்ந்தெடுத்து,
இறுதியில் தாயாக என்னை சுமக்கும்
அவளின் நல்ல குணமே
எனக்கு என்றும் அழகு.

வாழ்க்கை ஒரு வானவில்
ஆக இருந்தால் அதில் நீ ஒரு வர்ணம்!
வாழ்க்கை ஒரு இருட்டாக இருந்தால் அதில் நீ வெளிச்சம்!
ஆணின் அன்பை உணராது எந்த
பெண்ணும் சந்தோஷமாக வாழ்ந்தது
இல்லை.. பெண்ணின் உணர்வுகளை
புரிந்து கொள்ளாமல் ஆண்கள்
இவ்வுலகில் எதையும்
சாதித்தது இல்லை..!

பெண்களின் மனதை அறியும் நூல்
எந்த நூலகத்திலும் இல்லை அவளை
காதலித்தவனை தவிர..!
ஆயிரம் கோடி தங்க நகைகளை
அணிந்தாலும் ஒரு பெண்ணிற்கு..
ஒற்றை மஞ்சள் கயிறு கொடுக்கும்
மரியாதையை கொடுத்துவிட
முடியாது..!

தனக்கே வலித்தாலும் தன்னை
நேசித்தவர்களுக்கு வலிக்க
கூடாது என்று நினைப்பது தான்
பெண்களின் குணம்..!
கடவுள் எழுதிய கவிதை பெண்..
ஆனால் அந்த கவிதையை தினமும்
வர்ணிப்பது ஒரு ஆண்..!

யார் சொன்னது பெண்
தேவதைகள் நேரில் இல்லையென்று
இதோ காண்கிறேன் நான் தினமும்
என் அம்மாவின் உருவத்தில்.
தனக்கு பிடித்த பெண்ணிடம்
எப்போதும் மனம் விட்டு பேச
நினைப்பது தான் ஆண்கள் குணம்.
தனக்கு பிடித்த ஆணிடம்
தினமும் மனதோடு பேச
விருப்பப்படுபவது தான்
பெண்ணின் குணம்.

பெண்களின் முன்னேற்றம்
ஒரு பெண் காதல் வயப்படும் வரை
வேண்டுமானால் காதலனை
காயப்படுத்திருக்கலாம்.
ஆனால் தன் காதலை காப்பாற்றிக்கொள்ள
பெண் தான் கடைசிவரை போராட
வேண்டியிருக்கிறது.
பெண்தானே என்று
தாழ்வாக நினைக்காதே..
அவள் அங்கீகரிக்காவிட்டால்
உன்னை ஆண்மகன் என்று
உலகம் ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளாது..!

பெண்ணடிமை பேணிய விஷவித்தகர்கள்
வீழ்ந்தொழிந்தனர் என
பாருலகை ஆளவந்த பெண்களுக்கு
புத்துணர்ச்சி தருவோம்..
தன்னை விட தனது வாழ்க்கை
துணைக்கு அறிவும் திறமையும்
அதிகம் என்று தெரிந்த பின்..
பெண் சந்தோசம் கொள்கிறாள்..
ஆண் சந்தேகம் கொள்கிறான்..!

பெண்களுக்கு வீரமான
ஆண்களை விட.. அன்பான
ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!
ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம்மீது
பழி சொன்னாலும் தவறு நம் மீதே
இருந்தாலும் நம்மை
விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை
போராடும் உறவுக்கு பெயர்தான்
மனைவி..!

யார் மீது கோபம் வந்தாலும்
அதை பிடித்தவர்கள் மீது காட்டுவதே
பெண்களின் குணம்..!
நாள் முழுவதும் சக்கரம் போல் ஓயாமல்
சுழன்று வேலை செய்து வரும் பெண்கள்
அனைவருமே போற்றப்பட வேண்டிய
நடமாடும் தெய்வம் தான்.
பெண் ஒரு அழகிய இசைக்கருவி
இரைச்சல் வருகிறதே என்று
குறை சொல்வது முட்டாள்தனம்..
இசைக்க தெரியவில்லை என்பதை
ஒத்துக் கொள்ளுங்கள்..!
கோபத்தில் முகத்தை திருப்பிக்
கொண்டு சமாதானத்திற்காக
ஏங்கும் குழந்தையாகிறாள் பெண்..
பிடித்தவர்களிடம் மட்டும்..!

உலகில் ஆண் இமயமாய் திகழ்கிறான்..
பெண் அதில் ஓடும் வற்றாத நதி
ஆகிறாள்.. அவள் போகும்
இடமெல்லாம் பசுமை.. புகழ்..
வெற்றி.. மகிழ்ச்சி..!
ஒரு பெண் திமிராக இருப்பதற்கு
அவளின் ஒழுக்கமும் நேர்மையான
அன்பான குணமே காரணம்..!
பெண்களுக்கு மரியாதை கொடுங்கள்..
உங்கள் அம்மா பெண் என்பதால்
இல்லை நீங்கள் சிறந்த
ஆண் என்பதால்..!
ஒவ்வொரு பெண்ணின்
கடின உழைப்புக்கு பின்னாலும்
பொறுப்பற்ற ஓர் ஆண்
இருக்கின்றான்..!

பெண்கள் சந்தோஷமா
இருந்தா அவுங்க பேசுறத
யாராலும் நிறுத்த முடியாது..
சோகமா இருந்தால் அவுங்கள
யாராலும் பேச வைக்க முடியாது..!
பொண்ணுங்க சிரிச்சா அழகா
இருக்கும்.. ஆனால் அந்த
சிரிப்புக்குள் ஆயிரம்
கவலைகள் இருக்கும்..!
விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்;வெல்லுவம் என்றெ
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்.
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?
திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே

விடியு நல்லொளி காணுதி நின்றே,
மேவு நாக ரிகம்புதி தொன்றே;
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு,தாம்முதல் என்றன ரன்றே.
அடியொ டந்த வழக்கத்தைக் கொன்றே,
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர்,நந்தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர்,துணி வுற்றே
Pengal Kanneer Kavithai in Tamil
உண்மையான அன்பின் வெளிப்பாடு, கண்ணீர்.
அழ நினைத்தால் ஆசைதீர அழுதுவிடு! கண்ணீரின் முடிவில் சுமைகளும் கரையுமென்றால்…
கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன், நித்தம் காதலித்தாலும், காதலிக்கப்படுவதற்கான வரம் பெறவில்லை என்பதால்!

உறவுகள் தரும் உணர்வுகள் யாவும் இறுதியில் காயங்களாய் மாறும்! விழியோரம் கண்ணீராய் கரையும்!
கண்ணீருக்கு மட்டும் கடவுள் நிறம் கொடுத்து இருந்தால், இந்த உலகம் முழுவதும் கண்ணீரீன் நிறமாக தான் இருக்கும்!

கனவாகிய கனவுகள் நினைவினில் கற்பனையாய் கரைகிறது, கண்களும் ஈரத்தால் நிறைகிறது!
அவன் நினைவை மறக்க, தலையணை கண்ணீர் கரையாகின்றதே!
கண்மூடித்தனமான அன்பிற்கு, கண்ணீரே சாட்சி!

பிரிந்து போன நினைவுகள் ஒவ்வொரு நாளும் கண்ணுக்குள் வந்து கொண்டு தான் இருக்கும்… கனவாக அல்ல கண்ணீராக!
இது இருபதாம் நூற்றாண்டு
இருந்தும் பெண்ணின்றி
இம்மண்ணிருக்குமா…

Pengal Kavithai
என் கண்ணிர் நிரம்பிய கண்ணங்களுக்கு பின்னால், ஆயிரம் கவலைகள்!
காதல் ஒன்றே இல்லற வாழ்வை
மகிழ்ச்சியாக்க செய்யும்.
ஆணினது காதலாது எளிதில்
வெளிப்பட்டு விடும். பெண்ணின்
காதலோ அவ்வளவு எளிதாக
வெளிப்படுவதில்லை. ஆனால்,
அவளிடத்தில் காதலோ உண்டு.
பெண் ஆனவள், தன்னுடைய
காதலன் தன்னோடு நெருங்கி
இருக்கும் வேளையிலே,
அன்பை வெளிப்படுத்துகிறாள்.
உன்மேல் நான் கொண்ட ஏதோ ஒரு அழகிய உணர்வு, வலிகள் உணர்த்தி விழிகளின் ஓரம் கண்ணீர் மட்டும் பரிசளிக்குதே என்னிடம்!

சில நேரங்களில் நம்முடன் துணையாய் இருந்து, கண்ணீரைத் துடைப்பது தலையணைதான்!
விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் இருக்கும்! வலி போக்க வழி இனிய தனிமையே!
காதல் வரும் போது கவிதை வரும்! காதல் விலகும் போது, கண்ணீர் வரும்!

பெண்கள் கவிதைகள் வரிகள்காதல், இருவரது
உள்ளத்தில் இன்பத்தை ஏற்படுத்தும்
உணர்ச்சியாகும். வாழக்கையை வாழ
உறவால் ஏற்படும் நம்மிக்கையும் ஆகும்.
காதலன் எப்போதும் தன்னுடனே
இருக்க வேண்டும் என்றும் ஆசை கொள்பவள்.
காதலிக்கும் போது சந்திக்கும் காலமானது,
இருவருக்கும் குறைவாகவே காணப்படுகின்றது.
காதலனை கானும் தருவாயில், உன்னை
எப்போதும் நான் பார்த்து கொண்டே இருக்கும்
வேண்டும், உன்னை பிரியாமல் எப்போதும் நான்
இருக்க வேண்டும் என அன்பு வார்த்தைகளைக் கூறி,
தனது அன்பை வெளிப்படுத்துவாள்.