75+ New Collection Of Love Tamil Kavithaigal | காதல் கவிதைகள்

Best Tamil Kavithaigal: In this article you will find காதல் கவிதைகள், Tamil deep love Kavithaigal and many more kavita, quotes in Tamil language.

 Love Tamil Kavithaigal

Love Tamil Kavithaigal

நீ நீயாகவே
இருப்பதால்
உனை எனக்கு பிடிக்கும்னு
ஆரம்பிச்சி
எனக்காக மாறு என்பதில்
தொடங்குது பிரிவும
பிரச்சனைகளும்

மண்ணில் விழுந்த
மழை துளியாய்
உன் மனதோடு
தொலைந்து விட்டேன்
என்னுயிரே

தமிழ் காதல் கவிதைகள்

விலகலில் இல்லை
வாழ்க்கை
உன் விழிகளில்
என்றுணர்ந்தேன்
என்னவனே

மை தீட்டி வந்தவளே…!
என் மனதை களவாடி சென்றவளே…!
மதி மயங்கி நின்றவனை…!
உன் மாய விழியால் வென்றவளே…!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே…!
நீ இமை சிமிட்டி பேசியதால்…!
என் இளமை சிதைந்து தான் போனதடி…!
இத்தனை அழகு உன்னிடம்…!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்…!

True Love Kavithai Tamil

மாலை முடிந்தும் மறையாத சூரியன் – நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் – நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் – நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் – நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் – நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை – நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை – நீ தான்..

நீ அழகாக இருந்தால் தான்
உன்னை விரும்புவேன்
என்பதல்ல காதல் நீ எப்படி
இருந்தாலும் உன்னை
மட்டும் தான் விரும்புவேன்
என்பதே உண்மை காதல்.

Tamil Love kavithai

மரணமே வந்தாலும் உன்னை
மறக்காத இதயம் வேண்டும்.
மீண்டும் ஒரு பிறவி என்று
இருந்தால் அதிலும் நீ தான்
என் காதலாக வேண்டும்.

என் காதலுக்கு உரியவளே
உன் முகத்தை பார்த்தால்
போதும் வலிகளை கூட
சுகமாக உணர்ந்திடுவேன்.
உன் முகம் காண
காத்திருப்பதும்
ஒரு சுகம் தான்.

Tamil Love kavithai text

மிகவும் பிடித்த
பொருளொன்று
தொலைந்து
மீண்டும்
கைகளில்
கிடைத்தது போல்
மனம் மகிழ்வில்
உனை காணாமலிருந்து
கண்கள் கண்டதும்

விழிகள் உறங்கிட
மறுக்கும்
போதெல்லாம்
உறங்க வைக்கிறான்
முத்த சத்தத்தில்
தாலாட்டி

Tamil Love kavithai images

மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா

உன்னை காணும் அந்த
சில நொடிகளுக்காக
பல மணி நேரம் காத்திருக்கும்
அந்த நேரத்திற்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
காதலின் உயரம்.

Love Kavithai Tamil

இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்…
பதில் நானும் தரும் முன்பே…
கனவாகி கலைந்தாய்…!

உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு.
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.

Love Kavithai Tamil text-

அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்…!

காதலில் சிறு பிரிவும்
பெரிய சண்டைகளும்
வருவது ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்வதற்கே..!
இதை புரிந்து
கொண்டவர்களுக்கு பிரிவு
என்பது இல்லை..!

Love Kavithai Tamil language

என் தாயாக உன்னை
நினைக்கிறன் காதலியாக
அல்ல..! என் தாயின்
அன்பும் அரவணைப்பும்
உன்னிடத்தில் கண்டேன்..!

என்னை அறியாமல் உன்
மீது அளவு கடந்த பாசத்தை
வைத்து விட்டேன்..! அதனால்
தான் உன் சிறு மாற்றங்கள்
கூட என்னை அதிகம்
காயப்படுத்துகின்றது..!

Love Kavithai Tamil images

தவிர்க்க முடியாத
காலை நேர
தேனீராய்
நம் நினைவுகளையும்
நான் சுவைக்க
தவறுவதில்லை
அன்பே

கடினம் தான்
ஆனாலும் சுகம்
நீ வருவாய்
என்ற நினைப்பே
காத்திருப்பில்

Love Kavithai Tamil Image

சென்றபோதும் தங்கிவிட்டாய்
மனதில் வந்த
வழியை பார்த்து
ரசிக்கிறது விழியும்
மீண்டும் வருவாயென

ஒவ்வொரு முறையும்
பிரியங்களை அதிகமாக
அள்ளித் தெளித்தபடியே
செல்கிறது உன் பிரிவு

Love Feeling Kavithai Tamil

அதிகாலை ஆதவனாய்
ஆழ் மனதுக்குள்
தோன்றி
உறக்கத்தயும் கலைத்து
விடுகின்றது
உன் நினைவு

இன்னும் எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை
காதலிக்க தேடி வருவேன்.

Kavithai in Tamil Love Feel

இதயம் துடிப்பது சாதாரண
விடயமாக இருக்கலாம்
ஆனால் என் இதயம் துடிப்பது
உனக்காக மட்டுமே..!

ஓய்வென்பதே கிடையாது உனை நேசிப்பதில் மட்டும் என் மனதுக்கு அன்பே

 Tamil Love Kavithai SMS

காதல் கவிதைகள்

காணாத போது
கண்களுக்குள்
வாழ்கின்றாய்

சுமந்தே கடக்கின்றான்
என் மன
சுமைகளையும்
சலிக்காமல்
புன்னகையோடு

காத்திருந்த செவிகளுக்கு
விருந்தளித்தது அன்பே
என்ற உன் குரல்

காதல் கவிதைகள் வரிகள்

உன் கண்ணாடி நான்
என் பிம்பம் நீ

ஆயுள் ரேகையை
பற்றி கவலையில்லை
உன் கை ரேகையோடு
இணைந்திருப்பதால்

தட்டி விடவும் தோளில்
தட்டிக் கொடுக்கவும்
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் என்னை
கட்டி அணைத்து அன்பு
செலுத்த உள்ள உறவு
நீ மட்டும் தான்.

எத்தனை வேலைகள் இருந்தாலும்
என் அலைபேசி அதிர்ந்ததும்
நீயாக இருக்கும் என்று தானாக
ஓடும் என் கால்கள்..!

நீண்ட நாட்களாய் பூக்கள் மலரும்
சத்தம் கேட்டு ரசிக்க ஆசை..
அன்று தான் அது நிறைவேறியது
உன் இதழ்கள் விரித்து
என் பெயரை உச்சரித்தாய்..!

வான வீதியில் பவனி வரும் நிலவு
மகாராணிக்கு அள்ளி
இறைக்கப்பட்ட மல்லிகை
மலர்களோ நட்சத்திரங்கள்..!

காண முடியாத தூரம் தான்
இருப்பினும் காணும் இடமெல்லாம்
உன் முகம் தான்..!

போதைப் பழக்கம்
இல்லாத நான்
தினம் தினம்
போதையாகிறேன்
உன் விழிகளை
காணும் போது.

காதல் கவிதைகள்
எதற்கு என் காதலே
கவிதையாக அமைந்து
விட்ட பிறகு..!

இரவில் உறக்கம் என்னை
ஆட்சி செய்ய என்
உறக்கத்தை ஆட்சி
செய்கிறது உன் கனவுகள்..!

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…

நிழலே வீழும் இருளாயினும்.
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்.
உடன் வருகிறாய் தானே…?

விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா…

என் தேடலென்று
எதுவுமில்லை
நீ தொலையாத
வரையில்

நீ கிறுக்கிய வரிகள்
என்னை கிறுக்காக்கி
கொண்டிருக்கு அன்பே

நீரின்றி உலகுமில்லை நீயில்லையெனில் எனக்குலகமும் இல்லை உயிரே

Read More: Best Motivational Quotes In Tamil 2023

உயிர் காதல் கவிதைகள்

உன்னை
வாசித்ததைவிட
உன்னில் சுவாசித்ததே
அதிகம் நான்

நித்தம்
ஒரு புத்தம்புது
விடியலாய்
நானும் புதிதாய்
பிறக்கின்றேன்
உன் நினைவு
சாரல்
எனை நனைக்க

நீ விழிகளில்
கவிதை எழுத
என் விழிகளுக்கு
மையிடுகிறேன்
மையலோடு

அசைபோடும்
உன் நினைவில்
அசைவற்று
காத்திருக்கு
விழிகள்
நீ வருவாயென

மௌனமும்
பேசுமென்று
உணர்ந்தேன்
உன்னருகில்

பற்றிய
கரங்களுடனேயே
என் கடைசி
பயணம் வரை

ஜன்னலை தீண்டும்
தென்றலாய்
மனதை தீண்டி
உயிர் புள்ளிவரை
சென்று
எனை ஆள்கிறாய்
அன்பே

நீ அருகில்
இல்லையென்ற
வெறுமையில்லை
நொடியேனும்
நகராது
உன் நினைவு
உடனிருப்பதால்

என் காதலின்
கருவறையும் நீ
கல்லறையும் நீ

நீள வேண்டும்
இவ் இரவு
நீல வானமாய்
அன்பே

நினைவை தூவுகிறாய்
நிஜமாய் உணர்கிறேன்
நீ உடனிருப்பதாய்

உன் நெற்றி
தீண்டும் போதெல்லாம்
நீ திலகமிட்ட
அழகிய தருணம்
என்னுள்ளும் என்னவனே

வானவில்லிலும் காணாத
வண்ணம்
என்னவனின்
அழகிய எண்ணம்

உனை
பின் தொடரவோ
நான்
நடைபழகியது

அழகு எனும் சொல்லிற்கு
உண்மையான அர்த்தத்தை
உணர்த்தியவள் நீ தான்..!
அழகு என்பது உண்மையான
அன்பு என்று எனக்கு புரிய
வைத்தவள் நீ தான்…!

கவிதைகள் போல
இதமான மன
உணர்வைவையும் மன
நிறைவையும் தருபவை
உன் காதல் தான்…!

முகம் காணாமல் இருந்தாலும்
உன் குரல் கேட்காமல்
இருந்தாலும் என் அன்பிற்கும்
காதலிற்கும் உரித்தானவள்
நீ ஒருத்தி மட்டும் தான்
என்பதை நினைவில்
வைத்துக் கொள்.

துடிக்கும் இதயம் கூட
நின்று போகலாம் ஆனால்
நின்ற இதயம் கூட மீண்டும்
துடிக்கும் உன் அழகான
நினைவுகள் என் இதயத்தில்
பதிந்திருப்பதால்..!

நொடிக்கு நொடி மூச்சுக்
காற்று போல என்
இதயத்தை உரசி செல்கிறது
உன் நினைவுகள்..!

எனக்கு
பிடித்ததைவிட
உனக்கு
பிடித்தவைகளையே
மனமும் விரும்பி
ரசிக்கின்றது

மனமும்
குழந்தை தான்
உன்னையே
நினைப்பேன்
என்று பிடிவாதம்
பிடிப்பதில்

சற்றே
நீ விலகினாலும்
இருளாகுது
என்னுலகம்

கண்களை மூடினாலே
கனவாக வந்து
தங்கி கொ(ல்)ள்கிறாய்
விழிகளுக்குள் விலகாமல்

கடிகாரமாய் நீயிரு
நொடி முள்ளாய்
உனை தொடர்ந்தே
நானிருப்பேன்

உன் நினைவுகளாய்
நான் வாழ விரும்பவில்லை
உனக்கு நினைவு
இருக்கும் வரை
உன்னில் வாழ விரும்புகிறேன்

அத்தனை கோபங்களையும்
சட்டென
கரைத்து விடுகிறாய்
உன் குறும்புகளில்

ரசிக்க ரசிக்க
சலிக்காத
கவிதை நீ
என் கண்களுக்கு

நீ என்னவன் என்பதில்
எப்போதும் எனக்கு
திமிர் அதிகம் தான்

யாருமற்ற சாலையில்
உடன் பயணிக்கிறது
உன் நினைவுகள்
மட்டும் பேரிறைச்சலுடன்

உதிர்ந்த சருகும்
உயிர் பெற்றது
உன் பார்வை
தீண்ட

தொலைவில்
நீயிருந்தாலும்
உனை கையிலேந்தி
ரசிப்பேன் காதலுடன்
நிலவுப் பெண்ணே

தனித்து சென்றாலும்
துரத்தி வருகிறாய்
நினைவாகி என்னை

விட்டு பிரியும்
தருணத்தில்
மொத்த காதலையும்
கொட்டுகிறேன்
உன் கரத்தினுள்
என் கையை
பற்றிக்கொள்ளேன்
என்று

ஆரவாரமில்லா
உன் காதலில்
ஆழமாய்
நானும் மூழ்கித்தான்
போகிறேன்
அழகாய்
நமக்கான உலகுக்குள்

எப்படி எழுதினாலும்
ரசிக்கின்றாய்
இதழ்வரி கவிதையை

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

சிரிப்பை சிதறவிடாதே
சிக்கி தவிக்குது
நாணமும்

உறங்க போகிறேன்
தேடாதே என்கிறாய்
உன் கனவே நான்தான்
என்பதை மறந்து (கவுத)

நினைக்காத பொழுதிலும் காணாத கனவிலும்
உணர முடியா உறைந்து போன என் நிஜம் நீ.

உன் வருகையை எதிர்பார்த்து தினமும்
உதிர்ந்து கொண்டே இருக்கும் என் காதலும் காலமும்.

அவளும் நானும் இணைந்தால் சிறு துளி
மழை கூட இருவருக்கும் அடை மழை தான்.

உன் விரல் கோர்த்து நடக்கையில் எல்லாம்
என்னமோ உலகமே என்னை சுற்றி வருவதாய்
எனக்குள் வருவதாய் எனக்குள் ஒரு மதிப்பு.

நீ என்னை எத்தனை முறை கேட்டாலும்
அத்தனை கேள்விகளுக்கும் பதில் நீ தானே.

வெட்கத்தை மூடி மறைக்க முடியாமல் உன்
அணைப்புக்குள் இடம் தேடி மொத்தமாய்
உன்னுள் கரைந்து போகிறேன்.

நான் எத்தனை கேள்வி கேட்டாலும் அத்தனை
கேள்விகளுக்கும் வெட்கம், அந்த வெட்கத்தில்
எத்தனை பதில்கள் உள்ளதோ.

தென்றலாய் தீண்டுகிறாய் புயலாய் சரிகிறது மனம் உன்னிடத்தில்

2 thoughts on “75+ New Collection Of Love Tamil Kavithaigal | காதல் கவிதைகள்”

Leave a Comment