Tamil Thathuvam (தமிழ் தத்துவம்): In this article you will find tamil thathuvam images, vazhkai thathuvam kavithai and many more quotes in Tamil language.
Tamil Thathuvam
எதுவாயினும் கவனத்துடன், தேவைக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இன்றைய தேவை, நாளைக்கு தேவையற்றதாக மாறி விடுகிறது.
இறுதி பக்கம் இதுதான் என்று கூற முடியாத கதை புத்தகம் தான் நம் வாழ்க்கை.

பிடித்தை கூட வெறுத்து ஓதுக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது வாழ்க்கை! சில தித்திப்புக்கு பின் பல திகட்டல்கள்!
வாழ்க்கையில் முன்னேற, மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதைவிட, தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து முன்னேறும் வழியைக் காண வேண்டும்!
வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்துவிட்டால், ஆணவம் என்பது காணாமல் போய்விடும்!

காலம் என்றுமே நம் கேள்விக்கு விடைக் கொடுப்பதில்லை! பதில் கிடைக்கும் என்று நம்மை நாமே பழக்கிக் கொள்கிறோம்!
கஷ்டங்கள் கவலைகள் உனக்கு மட்டும் தான் என்று புலம்பாதே! இங்கு சந்தோஷத்தை மட்டும் அனுபவிக்கும் மனிதர் எவருமில்லை!
அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை என்னும் திரை அகலும்.

Tamil Thathuvam Images
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல நல்லவனும் ஒரு தீய குணத்தால் ஒழுக்கமற்றவனாக ஆகி விடுவான்.
பிறருடைய குற்றம் காண்பதிலும் பிறரைக் குறை சொல்வதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.

மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.
மனிதனின் உடன்பிறந்த இயல்பு ஆசை. அதை படிப்படியாக திருத்திக் கொண்டால் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.

யாரையும் வெறுப்பது கூடாது. அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். தனித்து வாழாதீர்கள். மனம் விட்டு பிறரிடம் பழகுங்கள்.
எல்லாருக்கும் மதிப்பளிப்பதோடு, அவர்களின் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பதே சிறந்த நாகரிகம்.

நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள். நல்லறிவு தரும் நுால்களைப் படியுங்கள்.
உன் பலவீனம் தான் உன்னை அசுரத்தன்மை உள்ளவனாகவும், கோபக்காரனாகவும் மாற்றுகிறது. அதை அறிந்து துரத்தி விடு.

வாழ்க்கை தத்துவம் Status
நல்லவர் நட்பை விட சிறந்த துணை வேறில்லை. நேர்மையாக நடப்பதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு இல்லை.
விதிப்படி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நடப்பதைக் கண்டு கலங்காதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கருது.

நாளை பார்த்துக் கொள்ளலாம் என நற்செயலை ஒத்தி போடாதே. உடனே அக்கறையுடன் அதில் ஈடுபடு.
பெற்றோரை காட்டிலும் சிறந்த தெய்வம் இல்லை. நேர்மையைக் காட்டிலும் சிறந்த வழிபாடு இல்லை.

பிற மனிதர்களோடு நீங்கள் உண்மையாக பழகாத வரையிலும், பிற மனிதர்கள் உங்களோடு உண்மையாக பழகாத வரையிலும், வாழ்க்கை அவ்வளவு அழகாக இருக்காது!
ஒரு மனிதனை மனிதனாக ஆக்குவது உதவிகளும் வசதிகளும் அல்ல! அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களுமே ஆகும்! சிந்தித்து செயலாற்றுங்கள்! நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும்!

எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆவதில்லை! சிலருக்கு படகாகவும், சீலருக்கு ஏணியாகவும், சீலருக்கு வீடாகவும் மாறுகின்றன! அதுப் போலத்தான் வாழ்க்கையும்!
விழுந்து விடுவேன் என்ற பயத்துடன் ஓடாமல் விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் ஓடுங்கள். வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது.

Valkai Thathuvam
அழகிய காட்சியைத் தேடாதீர்கள்..! காணும் காட்சியை அழகாக்குங்கள்! வாழ்க்கை அழகாகும்..
சொல்லில் இனிமை இருந்தால், வேப்ப எண்ணையும் விற்றுவிடலாம். சொல்லில் கடுமை இருந்தால் தேன் கூட விற்க முடியாது!

நல்லது கெட்டதை பகுத்தறியும் விவேகத்தைக் கற்றுக் கொடுப்பதே உண்மையான கல்வியாகும்.
செய்யப் போவதையே சொல்லுங்கள். சொன்னதையே செயல்படுத்துங்கள்.

மனிதன் கடமையில் பொறுப்புடன் இருந்தால், அதற்குரிய நற்பலன் கிடைத்தே தீரும்.
பூமிக்கு வரும் போது நாம் எதையும் கொண்டு வரவும் இல்லை. போகும் போது எதையும் கொண்டு போகவும் முடியாது.

பிறருக்கு துன்பம் ஏற்படாத வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய சிறப்பான செயல்பாடுகளே, எதிர்கால வாழ்க்கைக்கு ஆணி வேராக இருக்கிறது.

Life Thathuvam In Tamil
ஆரோக்கியமான வாழ்க்கையே உறுதியான வாழ்க்கை.
நன்றி உள்ளவனே நல்லவன். தன்னை உணர்ந்தவன். ஒருவர் செய்த நன்றியை மறப்பது பாவத்திலும் பாவம்.

தொலைந்து போன நாட்களை எண்ணி வருந்தினால் இருக்கின்ற மீதி நாட்களும் தொலைந்து போகும்!
வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்றால், பல துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும்!

சில கனவுகளை நிஜமாக எண்ணி மகிழ்வதும், நிஜங்களைக் கனவாக எண்ணி மறப்பதும் தான் வாழ்க்கை!
வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல! எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே!

உன்னை விட்டு விலகி செல்பவை எதுவாக இருந்தாலும், சந்தோசமாக வழி அனுப்பி வை! நீ இழந்ததை விட, சிறப்பாக தர வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது!
காலத்தின் மதிப்பு தெரிந்தால், வாழ்வின் மதிப்பு தெரிந்துவிடும்!

Thathuvam Quotes In Tamil
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை! முடிந்தவரை யாரையும் காயப்படுத்தாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்…
நாக்கைக் கட்டுப்படுத்தினால் உள்ளத்தையும், உடலையும் எளிதாக வசப்படுத்த முடியும்.

பெற்ற தாயைப் போற்றுங்கள். அவளின் தியாகமே உங்களை ஆளாக்கியது என்பதை மறவாதீர்கள்.
கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம் இருந்து விட்டால் நம் வாழ்வே சொர்க்கமாக மாறி விடும்.

நடந்ததையே எண்ணி வருந்தாதீர்கள். நிகழ்காலத்தைப் பயனுடையதாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
இன்பம் துன்பத்திலும், துன்பம் இன்பத்திலும் முடிவடையும். இந்த முரண்பாட்டை யாரும் தவிர்க்க முடியாது.

புத்தக அறிவு மட்டும் பயன் தராது. எதையும் அனுபவம் மூலமாகவே சோதித்து உணர்வதே சிறந்தது.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது, தடைகளற்ற வாழ்க்கை அல்ல! தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை..!

Abdul Kalam Tamil Thathuvam
வாழ்நாளெல்லாம் அடிமைமாக தொட்டிக்குள் வாழ்வதைவிட பிடிபட்ட அன்றே சட்டியில் குழம்பாக கொதிப்பது மேல்
கோபத்தில் கண்டதை தூக்கிப் போடுவதைவிட, அந்த கோபத்தையே தூக்கிப் போடுங்கள்.. வாழ்க்கை இன்னும் சிறப்பாகும்!

பிறரிடம் கையேந்துபவனை விட பிறருக்கு உதவ மனமில்லாமல் இல்லை என்று மறுப்பவனே இழிந்தவன்.
உடல் தூய்மையை விட மனத்தூய்மையே அவசியமானது. இதயத்தை நல்ல எண்ணத்தால் நிரப்பு.

பிறரின் இன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள். மற்றவர் துன்பத்தில் பங்கேற்று உதவி செய்.
பொருள் இல்லாதவன் ஏழையல்ல. எப்போதும் மனதில் ஆசையைச் சுமந்து திரிபவனே ஏழை.

ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட, உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது, அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும்.
வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில், காலத்தை வென்றவர்கள் சரித்திரத்தில் இல்லை! மாறாக காலத்தை உங்கள் நண்பனாக தேர்ந்தெடுங்கள்! காலம் அதிஷ்டத்தை உங்களுக்கு விட்டு கொடுக்கும்!

இங்கு எல்லாவற்றையும் எல்லாரிடமும் கூறாதே… அதனால் ஒன்றும் மாறுவதும் இல்லை! அவர்களுக்கு அது தேவையும் இல்லை!
இதுவரை நடந்ததை யோசிப்பதை விட, இனி எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்!

நம் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய நல்ல மாற்றங்கள் எல்லாம் – நாம் அதிகம் நேசித்த ஒன்றை இழந்த பிறகே நடந்திருக்கும்! ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும்!
பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.

Latest Thathuvam In Tamil
ஐம்புலன்களுக்கு அடிமையாவது நல்லதல்ல. அவற்றை ஆட்சி செய்யும் நிலைக்கு மனிதன் உயர வேண்டும்.
எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்.

தமிழ் வெற்றி தத்துவங்கள்
Tamil Vetri Thathuvangal
வெற்றி பெற்றபின் அமைதியாக இருப்பவன், இரண்டுமுறை வென்ற மனிதன் ஆகிறான்.
மோசமானவற்றிற்காக நான் தயாராகவே இருக்கின்றேன்; ஆனால், சிறந்தவற்றிற்கான நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.

செயல்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆனால் செயலின்றி மகிழ்ச்சியில்லை.
மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.

தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவுமில்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன.
பலகீனமான மனங்களே சோம்பலிடம் தஞ்சம் அடைகின்றன. முட்டாள்களின் சுகமான பொழுதுபோக்குதான் சோம்பல்.

நிறைய பேர் அறிவுரை பெறுகிறார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள் தான் அதனால் பயன் பெறுகிறார்கள்.
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம்.

பெரிய எண்ணங்களை சிந்தனை செய்; ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு.
தவறவிட்ட வாய்ப்பை விட அதிக மதிப்புடைய விஷயம் வேறு எதுவுமில்லை.

அரிசி என்றாலும்
அரசியல் என்றாலும் களையெடுப்பது
அவசியம்
அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்
பல வலிகளை கொடுத்ததும் முகநூல்…
வானிலையைவிட அதி
வேகமாய் மாறுகிறது
மனிதனின் மனநிலை…

காப்பாற்ற வேண்டிய
நேரங்களில் ஓய்வெடுக்க
போய்விடுகிறார் கடவுள்…
புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது…
பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது…
மனித மனங்களிலிருந்து மனிதநேயம்
மட்டும் தான் இன்னும் எட்டாத தொலைவில் இருக்கின்றது…
மனதை சுத்தப்படுத்த ஒருநொடி
போதும் அந்த ஒருநொடியை
செலவு செய்யத்தான் நமக்கு
மனமில்லை…

கஸ்டங்கள் கவலைகள் உனக்கு
மட்டும் தான் என்று புலம்பாதே
இங்கு சந்தோஷத்தை மட்டும்
அனுபவிக்கும் மனிதர் எவருமில்லை…
எங்கு உனக்கு
கேள்வி கேட்க
உரிமையில்லையோ
அங்கு நீ
அடிமைபடுத்தப்படுகிறாய்…
வருத்தமோ, துன்பமோ இன்றி எவராலும் எளிதில் புகழ்பெற முடியாது.
லட்சியம் பெரிதாக இருக்குமானால் நமது வெற்றியும் பெரிதாக இருக்கும்.

எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்
மனிதராகப் பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்.
உங்கள் காலில் நில்லுங்கள், அது தானாகவே உங்களை வழிநடத்திச் செல்லும்.

எதிலேனும் சிறந்து விளங்குவதற்காக எத்தகைய முயற்சிக்கும் அஞ்சாதீர்.
மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.
மாறக்கூடியதை மாற்றுங்கள், மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்.

மன வலிமையுடன் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை நல்லவிதமாகப் பயன் படுத்தவும் வேண்டும்.
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
ஒவ்வொருவர் சொல்லுக்கும் கீழ்படிந்து கொண்டிருந்தாள் நீங்கள் சாதிக்க முடியாது.

ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.
கற்றுக்கொள்வதற்காக வாழுங்கள், உண்மையில் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொள்வீர்கள்.
உங்கள் வெற்றியின் ரகசியம், உங்களுடைய தினசரி செயல்பாட்டின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகின்றது.

பணத்தை விட நேரம் அதிக மதிப்புடையது ஏனென்றால் நேரம் ஈடு செய்யமுடியாதது.
வெற்றி என்பது உங்களுக்கு என்ன தேவையோ அதை பெறுவது; மகிழ்ச்சி என்பது நீங்கள் எதை பெற்றீர்களோ அதை விரும்புவது.
திருப்தியான மனம் ஒன்றே மனிதர்களுக்குகிடைக்கும் மிகப்பெரிய கொடை.

தனது செயலில் தயக்கம் உடைய ஒருவர் அதில் இழப்பையே சந்திக்கிறார்.
எரிகிற விளக்காக இரு அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.
விதியை எள்ளி நகைப்பவனே வெற்றிகள் பலவற்றைக் காண்பான்.
Read more: Best Motivational Quotes In Tamil
வெற்றியின் உண்மையான ரகசியம் எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே.
நேரத்தை இலாபமாக அடைபவர்களுக்கு எல்லாமே இலாபம்தான்.
பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.

வாழ்க்கையில் வெற்றி என்னும் படிகளை நாம் தொடும் போது அதில் தோல்வி என்னும் 1000 குழிகள் இருக்கும்..
குழியில் விழுந்து முயற்சிப்பவன் விண்ணை தொடுவான்.. குழியில் விழுந்து முயற்சிக்காதவன் மண்ணை தொடுவான் இதுதான் வாழ்க்கை.
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

நேரத்தை வீணாக்கத் துணிந்தவர்கள், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவர்கள்.
கெட்ட விஷயங்கள் காற்றைப்போல் ஆகி விரைவில் பரவும். நல்ல விஷயங்கள் தாமதிக்கும்.
உலகிலேயே மிகப் பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான்.

எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.
பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.
பக்குவம் என்பது
காயப்படுத்தியவர்களை
காயப்படுத்த வாய்ப்பிருந்தும்
காயப்படுத்தாமல்
கடந்து செல்வதே
பதிலுக்கு பதில்
பேசுபவர்கள்
அறிவாளிகளும் அல்ல
மௌனமாய்
விலகி நிற்பவர்கள்
முட்டாளும் அல்ல

நல்லவராய் இருப்பது
நல்லது தான்
ஆனால்
நல்லது கெட்டது தெரியாத
நல்லவராய் இருப்பது
நல்லதல்ல
உங்கள் பார்வை
நல்லதாக இருந்தால்
உலகம் அழகாக தெரியும்
உங்கள் வார்த்தைகள்
நல்லதாக இருந்தால்
உலகத்திற்கு நீங்கள்
அழகாக தெரிவீர்கள்
உங்கள் எண்ணங்களை
தூய்மைப்படுத்துங்கள்
இந்த உலகம்
உங்கள் எண்ணங்களை
வரவேற்கும்
உங்களை உயர்வாக
போற்றும்
கற்கண்டும்
கல் தான்
ருசிக்காத வரைக்கும்
வாழ்க்கையும்
இனிமை தான்
வலியினை உணராத வரைக்கும்
விளகிய பிறகு
விளக்கங்கள் எதற்கு
வேண்டாம் என்ற பிறகு
விவாதங்கள் எதற்கு
சிறப்பான
விடைகளை விட
சிந்திக்க வைக்கும்
வினாக்களே
அறிவை வளர்க்கும்
கைப்பிடி இல்லாத
பிளேடை போல் தான்
வாழ்க்கையும்
கவனமாக கையாள்வோம்
போதனையிலும்
கிடைக்காத ஞானம்
வேதனையில்
கிடைக்கும்
சில நேரங்களில்
எதுமேலையும்
ஆசைப்படாம
இருக்கணும்னு நினைக்கிறதே
பெரிய ஆசை தான்
சில சமயம்
இலக்குகளை
அடைய வேண்டுமென்றால்
பொறுமையை கையாள
கற்றுக்கொள்ள வேண்டும்
வண்ணங்கள்
இருந்தால் தான்
அந்த வானவில்லுக்கே அழகு
நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான்
உங்க வாழ்க்கைக்கே அழகு
நட்பில் எதிர்பார்ப்பு
இருக்கலாம்
ஆனால் நட்பே
எதிர்பார்ப்பாய் இருக்கக்கூடாது
நம்மை நாம் சரியாக
புரிந்து கொண்டாலே
நம் வாழ்க்கை அழகாக
மாறி விடும்
தனிமையிலிருக்கும்
போது தீயாயிரு
இல்லயேல்
உன்னை எரித்துவிடுவார்கள்
ஏமாற்றம்
வலியைதந்தாலும்
நல்வழியையும் காட்டும்
வாழ்க்கைக்கு
நாமும் நல்லவர்களே
அடுத்தவர் தவறை
சுட்டிகாட்டும் போது மட்டும்
பார்ப்பவன்
என்ன நினைப்பான்
என்று பயத்துடன் வாழாதீர்கள்
படைத்தவன்
என்ன நினைப்பான்
என்று பயந்து வாழுங்கள்
ஒவ்வொரு நிமிடமும்
இந்த உலகத்தை
உன்னால் ஜெயிக்க முடியும்
முதல் நிமிடம் மட்டும்
நிதானமாக யோசித்தால்
தலைக்கவசம்
உயிரை காக்கும்
தலைக்கனம்
வாழ்வை அழிக்கும்
நீங்கள்
எதை செய்தாழும்
உங்கள் உள்ளத்திற்க்கும்
உலகத்திற்க்கும் உண்மையாக
நடந்து கொள்ளுங்கள்
ஆசை படுங்கள்
தவறில்லை
பேராசையே
வாழ்க்கைக்கு கேடு
வார்த்தைகளில்
உண்மை இல்லையேனில்
எண்ணங்களில்
தூய்மை இருக்காது
போதித்தால் புரியாது
பாதித்தால்
தான் புரியும்
அறிவுரை வழங்காதே
கேட்காத வரை
அதிகமாக தெரிய தெரிய
தெரியாதது அதிகம் இருக்கிறது
என தெரிய வருகிறது
இல்லமோ உள்ளமோ
கண்டதையும் நிரப்பினால்
இடைஞ்சல் தான்
valkai thathuvam tamil
வாழ்க்கை நம்மள
ரொம்ப கஷ்டப்படுத்துச்சுனா
நாம சரியான பாதையில்
போறோம்னு அர்த்தம்
பொறுமை ஒரு போதும்
தோற்பதில்லை
பொறாமை ஒரு போதும்
ஜெயிப்பதில்லை
கண்ளை
கலங்க வைக்க
வெங்காயம் தான்
வெட்டனும்னு இல்ல
உண்மையான அன்பு
வைத்தாலே போதும்
உயர்ந்த விஷயத்தை
எளிய முறையில் கூறுவதே
அறிவின் லட்சணம்
உனது குணம் சரியாக இருந்தால்
உனது புகழும் சரியாக இருக்கும்
லட்சியம்
இருக்குமிடத்தில்
அலட்சியம்
இருக்காது…
இரக்க மனமும்
இரும்பாகி போகிறது
சிலர் சுயநலவாதியாகும்
போது…
குறிக்கோள் இல்லாத
வாழ்க்கை வெறும்
குப்பை மேடு தான்…
பழகிய கத்தி என்றாலும்
பதம் பார்க்கிறது
பல நேரங்களில்
பக்குவமில்லாமல்
வருமானத்திற்கு மட்டும்
தான் இங்கு பஞ்சம்
வறுமைக்கு
மட்டும் இல்லை
எப்போதுமே பஞ்சம்…
உழைப்புக்கு
பலன் மெதுவாய்
கிடைத்தாலும்
அது என்றும்
உயர்வாய்தான் பேசப்படும்…
எதிர்காலம்
உள்ளங்கை
ரேகையில் இல்லை
அதுஉன் உள்ளத்தில்
உள்ளது…
பொறுமையும் தன்னடக்கமும்
வாழ்வின் பிற்பகுதியை
வெற்றியாக்கும்…
ஒரு கதவை
மூடினாலும்
இன்னோரு கதவை
திறப்பான்
என்ற நம்பிக்கை
தான் வாழ்க்கை…
ரசிப்பவை
அனைத்தும் அழகல்ல
பார்க்கும் பார்வையிலும்
மனதில் எழும்
எண்ணங்களில்
மட்டுமே உள்ளது
வார்த்தைகளின்
எல்லைகளை பொருத்தே
உறவுகளின் ஆயுட்காலமும்
அதிகரிக்கும்
பொய்க்கு
வேகம் அதிகம்
ஆயுள் குறைவு
உண்மைக்கு
வேகம் குறைவு
எப்போதும் மறைவது இல்லை
உபதேசம் செய்யாதே
உதாரணமாய் இரு
ஊரைப் பழிக்காதே
உன்னை மாற்றிக்கொள்
படிப்பறிவை விட
மேலானது
வாழ்க்கையில் சிலரால்
படும் அறிவு
பழக பழக பாலும்
புளிக்கும் என்பது
அன்பிற்கும் உரியதே
எதை சரியாக செய்தாலும்
குறை சொல்ல நாலு பேர்
இருப்பார்கள்
முடியாதுனு விட்டுட்டா
வெற்றியில்லை
விட முடியவே முடியாதுனு
விடாமல் இருந்தால்
தோல்வியில்லை
வசதியென்பது
பணத்தில் மட்டும் இல்லை
மனசுக்கு நிம்மதியான வாழ்க்கையும்
வசதியான வாழ்க்கை தான்
உணரும் வரை உண்மை
கூட பொய் தான்
புரியும் வரை வாழ்க்கை
கூட ஒரு புதிர் தான்
வெற்றிக்கு துணையாக
இருப்பவன் நண்பன்
வெற்றிக்கு காரணமாக
இருப்பவன் எதிரி
ஆடுகிற ஆட்டமும்
ஒடுகிற ஓட்ட மும்
ஒரு நாள் ஓயும் போது
கூடுகிற கூட்டம்தான்
சொல்லும் நீ யாரென்பதை
மற்றவர்களின் தவறுகளை
திருத்தும் முன் ஒரு முறை
கண்ணாடியை
பார்த்துக்கொள்வது நல்லது
எல்லோர்கிட்டையும்
அளவோடு பேசனும்
அளவில்லாமல் பேசினால்
அவதிப்பட வேண்டியது தான்
இருண்ட வானில்
மட்டுமின்றி
துவண்ட மனதிலும்
நீயே ஒளி வீசுகிறாய்
(அழகு நிலா)
சில நேரங்களில்
அறிவைவிட
தைரியத்தினாலயே
பெரிய காரியங்கள்
சாதிக்கப்படுகின்றன
நடந்தது எதுவோ
அது நல்லதாக
இருக்க வேண்டும்
இல்லையெனில்
நடக்க இருப்பதை
திருத்திடுவோம் எதுவாக
இருந்தாலும்
கவலைகள்
எங்கிருந்து வரும்
என்று தெரியாது ஆனால்
புன்னகை நம்மிடம்
தான் உள்ளது
நம்ம பின்னாடி
மத்தவங்க பேசுறதல்லாம்
கேட்டுட்டு இருந்தா
வாழ்க்கையில் முன்னாடி
போக முடியாது
தேதி போல
உங்கள் கவலைகளை
தினமும் கிழித்து
எரிந்து விடுங்கள்
ஒவ்வொரு நாளும்
உங்களுக்கானதாக
எண்ணி புதிதாய் வாழுங்கள்
வருவது வரட்டும்
போவது போகட்டும்
என்று இருந்தால் நிம்மதி
நிச்சயம்
மனதில் பட்டதை
சொல்லுங்கள்
ஆனால்
அடுத்தவர் மனம்
பட்டுபோகும்படி
சொல்லாதீர்கள்
எதன் மீதும் ஆசைப்படுவதில்
தவறில்லை அதற்கு நீ
அடிமை ஆகாத வரை
மன உறுத்தல்கள் என்றுமே ஒரு
கொடிய விஷம். உன் தன்னம்பிக்கையை
கெடுக்கும் கூர்மையான ஆயுதம்.
கனவுகளில் வாழ்க்கையை தேடலாம்.
ஆனால் தேடல்கள் என்றுமே கனவுகளாக
மாறி விடக்கூடாது. நிஜங்களில்
கற்பனை பொய்கள் வேரூன்றக்கூடாது…!
இரக்க குணமும் தயாள மனமும்
கொண்டு ஒருவருக்கு உதவ முன்வரும்
அனைவரும் திக்கற்ற உயிர்களுக்கு
உதவும் கடவுள் போலவே…!
தினமும் பந்தயம் இந்த பகலுக்கும்
இரவுக்கும். இறுதியில் வெல்வது
இந்த இரண்டும் தானே…!
அதுபோலவே இங்கு மனிதர்கள்
உண்டு. யாரும் வென்று கொண்டே
இருக்கப் போவது இல்லை ..
தோல்விகளால் வீழப்போவதும் இல்லை.
உன் சிந்தையால் எந்த சிக்கலுக்கும்
தீர்வு கிடைக்கும். நீ நிதானமாய்
யோசிப்பதால் மட்டுமே தீர்வு காண இயலும்.
பிரிவின் கொடுமையை பிரிந்தால்
தான் உணர முடியும். அன்பின்
ஆழத்தை இரு மனங்கள் இணைந்தால்
தான் நிலை நாட்ட இயலும்…
அன்பை நிரூபிக்க ஆயிரம் வழிமுறைகள்
சொல்லப்பட்டாலும் காயப்பட்ட
மனது என்ன எதிர்பார்க்கும்
என்பது எப்போதும் ஒரு புரியாத புதிரே…!
அனைத்தும் அருமையாக உள்ளது