வாழ்க்கை பொன்மொழிகள் | Ponmozhigal Tamil – Images

வாழ்க்கை பொன்மொழிகள்: வாழ்க்கை பொன்மொழிகள் text, Valkai Thathuvangal In Tamil, Ponmozhigal Tamil Images, Ponmozhigal Tamil.

வாழ்க்கை பொன்மொழிகள்

செய்யப் போவதையே சொல்லுங்கள்.
சொன்னதையே செயல்படுத்துங்கள்.

மனிதன் கடமையில் பொறுப்புடன்
இருந்தால், அதற்குரிய நற்பலன்
கிடைத்தே தீரும்.

பூமிக்கு வரும் போது நாம் எதையும்
கொண்டு வரவும் இல்லை.
போகும் போது எதையும்
கொண்டு போகவும் முடியாது.

நம்பிக்கையே வாழ்க்கையின்
சக்தி; கவலை வாழ்க்கையின் எதிரி..!

எல்லோரையும் திருப்திப்படுத்த
நினைப்பவன் வாழ்க்கையில்
வெற்றி பெற மாட்டான்.

பெரும் அறிவாளிகள்
புத்தகங்களோடு வாழ்க்கையையும்
சேர்ந்தே படிக்கிறார்கள்.

நீ தனிமையில் இருக்கும் போது
உனக்கு என்ன தோன்றுகிறதோ
அது தான் வாழ்வை தீர்மானிக்கும்.

துன்பத்தில் விழுந்து எழுபவன்
வாழ்க்கையின் எல்லை வரை
இன்பம் காண்பான்.

நல்லவர் நட்பை விட சிறந்த
துணை வேறில்லை. நேர்மையாக
நடப்பதைக் காட்டிலும் சிறந்த
வழிபாடு இல்லை.

விதிப்படி இந்த உலகம் இயங்கிக்
கொண்டிருக்கிறது. நடப்பதைக்
கண்டு கலங்காதே.
நடப்பதெல்லாம் நன்மைக்கே
என்று கருது.

அறிவு என்னும் கதவு திறந்தால்
மட்டுமே அறியாமை என்னும்
திரை அகலும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்
போல நல்லவனும் ஒரு தீய
குணத்தால் ஒழுக்கமற்றவனாக
ஆகி விடுவான்.

பிறருடைய குற்றம் காண்பதிலும்
பிறரைக் குறை சொல்வதிலும்
நேரத்தை செலவிடாதீர்கள்.

Valkai Thathuvangal In Tamil

மேடு பள்ளம் நிறைந்தது தான்
உலகம். அதுபோல இன்ப துன்பம்
நிறைந்தது தான் மனித வாழ்க்கை.

மனிதனின் உடன்பிறந்த இயல்பு
ஆசை. அதை படிப்படியாக திருத்திக்
கொண்டால் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.

யாரையும் வெறுப்பது கூடாது.
அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்.
தனித்து வாழாதீர்கள். மனம் விட்டு
பிறரிடம் பழகுங்கள்.

வாழ்வில் பொய் கூட
உரைக்கலாம் உண்மை
பேசுபவன் போல் ஒரு போதும்
நடிக்காதே..!

அழுகையை ரசிப்பவர்கள் தான்
ஆனந்தமாய் சிரிக்க முடியும்.

நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக்
கொடு; இறைவன் நிச்சயம்
உனக்கு வழி விடுவான்.

மணிக்கணக்கில் உபதேசம்
செய்வதை விட.. ஒரு கணப்
பொழுதாவது உதவி செய்வது மேல்.

நாக்கைக் கட்டுப்படுத்தினால்
உள்ளத்தையும், உடலையும்
எளிதாக வசப்படுத்த முடியும்.

பெற்ற தாயைப் போற்றுங்கள்
அவளின் தியாகமே உங்களை
ஆளாக்கியது என்பதை மறவாதீர்கள்.

கட்டுப்பாடான வாழ்க்கை,
நல்லொழுக்கம் இருந்து
விட்டால் நம் வாழ்வே சொர்க்கமாக
மாறி விடும்.

நடந்ததையே எண்ணி வருந்தாதீர்கள்.
நிகழ்காலத்தைப் பயனுடையதாக்கும்
முயற்சியில் ஈடுபடுங்கள்.

எல்லாருக்கும் மதிப்பளிப்பதோடு,
அவர்களின் வாழ்வில் குறுக்கிடாமல்
இருப்பதே சிறந்த நாகரிகம்.

நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள்.
நல்லறிவு தரும் நுால்களைப் படியுங்கள்.

பிறருக்கு துன்பம் ஏற்படாத
வகையில் உங்களது வாழ்க்கையை
அமைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய சிறப்பான
செயல்பாடுகளே, எதிர்கால
வாழ்க்கைக்கு ஆணி வேராக இருக்கிறது.

ஆரோக்கியமான
வாழ்க்கையே உறுதியான
வாழ்க்கை.

நன்றி உள்ளவனே நல்லவன்.
தன்னை உணர்ந்தவன்.
ஒருவர் செய்த நன்றியை
மறப்பது பாவத்திலும் பாவம்.

உடல் தூய்மையை விட
மனத்தூய்மையே அவசியமானது.
இதயத்தை நல்ல எண்ணத்தால் நிரப்பு.

Ponmozhigal Tamil

பிறரின் இன்பத்தைக் கண்டு
மகிழ்ச்சி கொள். மற்றவர்
துன்பத்தில் பங்கேற்று உதவி செய்.

பொருள் இல்லாதவன் ஏழையல்ல.
எப்போதும் மனதில் ஆசையைச்
சுமந்து திரிபவனே ஏழை.

உலகில் உள்ள எல்லா இதயங்களும்
நல்ல இதயங்களே.. ஆனால் சந்தர்ப்பம்
சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.

ஒருவனை அகந்தை ஆட்கொண்டால்
அழிவு அவன் தலைமுறையையும்
ஆட்டுவிக்கும்.

நல்லது கெட்டதை பகுத்தறியும்
விவேகத்தைக் கற்றுக் கொடுப்பதே
உண்மையான கல்வியாகும்.

நாளை பார்த்துக் கொள்ளலாம்
என நற்செயலை ஒத்தி போடாதே.
உடனே அக்கறையுடன் அதில் ஈடுபடு.

பெற்றோரை காட்டிலும் சிறந்த
தெய்வம் இல்லை. நேர்மையைக்
காட்டிலும் சிறந்த வழிபாடு இல்லை.

இன்பம் துன்பத்திலும், துன்பம்
இன்பத்திலும் முடிவடையும்.
இந்த முரண்பாட்டை யாரும்
தவிர்க்க முடியாது.

வாழ்க்கை என்பது ஊஞ்சலில்
உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல;
புயலுக்கு நடுவே படகைச்
செலுத்துவது போன்றது.

நல்ல முடிவுகள்.. அனுபவத்திலிருந்து
பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கிறது.

பேராசை கொண்டவன் எதிலும்
திருப்தி அடைய மாட்டான்.
திருப்தியே மேலான செல்வம்.

ஐம்புலன்களுக்கு அடிமையாவது
நல்லதல்ல. அவற்றை ஆட்சி
செய்யும் நிலைக்கு மனிதன்
உயர வேண்டும்

புத்தக அறிவு மட்டும் பயன் தராது.
எதையும் அனுபவம் மூலமாகவே
சோதித்து உணர்வதே சிறந்தது.

நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு
நல்ல பண்புகளை முறையாகப்
பெற்றிருக்க வேண்டும்.

எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன்
விளைவாக இன்பமும் துன்பமும்
இணைந்தே உண்டாகும்.

பிறரிடம் கையேந்துபவனை விட
பிறருக்கு உதவ மனமில்லாமல்
இல்லை என்று மறுப்பவனே இழிந்தவன்.

எதிர்கால மகிழ்ச்சிக்கு
கல்வியே ஆதாரம்.

பேசிக் கொண்டே இருக்காமல்
செயலில் இறங்குவது அதை
முடிப்பதற்கான வழி.

துன்பப் படுபவர்களுக்கு
உதவுபவன், இறைவனுக்கு
கடன் தருகிறான்.

நம்பிக்கை நம்மை வாழவைக்கும்.
அச்சம் நம்மை கொன்றே விடும்.

நமக்கு கிடைக்காததை நினைத்து
சோகத்தோடு இருப்பதை விட,
நமக்கு கிடைத்ததை நினைத்து
மகிழ்ச்சியோடு இருப்பதுதான்
வாழ்க்கையில் நிம்மதியைத் தரும்.

அறிந்து கொள்ள ஆர்வம்
கொண்டவனே அறிவாளி ஆகிறான்.

பிறரிடமிருந்து நல்லனவற்றைக்
கற்றுக் கொள்ள மறுப்பவன்
இறந்தவனுக்கு இணையானவன்.
சுவாமி விவேகானந்தர்

குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களை
வரவேற்க கற்றுக்கொள். எந்த அளவு
இதைச் செய்கிறாரோ, அந்த
அளவுக்கு வேகமாக
முன்னேறுவாய்.
அரவிந்தர்