தனிமை கவிதை வரிகள் – Alone Quotes Tamil – Status

தனிமை கவிதை வரிகள்: Thanimai Quotes In Tamil, தனிமை கவிதை வரிகள், Sad Alone Quotes In Tamil, Alone Quotes Tamil and more status, quotes, sms, messages in tamil language.

தனிமை கவிதை வரிகள்

நினைவுகளே மனதின் ரணங்களாக
நித்தமும் எமை தொடர்ந்திட
நேசிப்போர் யாருமிலாமல்
கண்ணீரால் கசிந்துருக வைத்திடும்

பறவைக்கும் கூடு உண்டு
பாதைக்கும் முடிவுண்டு
ஊசலாடும் என் மனதை
ஆற்றுகைப் படுத்துவோர் யாருளர் இவ்வுலகில்?

நாம் கண்ட கனவுதனை இழந்து
நமக்கான உறவுகளை இழந்து
நாதியற்ற வழிப்போக்கனாய் – நம்மை
அலைய வைத்திடும் இந்த பொல்லாத தனிமை

தனிமை எனக்கு மிகவும்
பிடிக்கும் காரணம் அங்கு
என்னை காயப்படுத்த
யாரும் இல்லை.

தூக்கம் வந்தாலும் தூங்காமல்
நமக்கு பிடித்தவர்களை
தனிமையில்
நினைத்துக்கொண்டு இருப்பதும்
ஒரு தனி சுகம் தான்.

பேச யாரும் இல்லை
என்பதை விட பேசுவதைக்
கேட்க யாருமில்லை
என்பது தான்
தனிமையின் கொடூரம்.

எதுவும் சில காலம் தான்
இதைப் புரிந்து கொண்டால்
தனிமை இனிமையாக
இருக்கும்.

இன்பத்திலும் துன்பத்திலும்
மனம் விட்டுப் பேச
துணை இல்லாத
போதுதான் தெரியும்
தனிமையின் கொடூரம்.

தனிமை என்பது
என்னைப் பைத்தியம்
ஆக்கிக் கொண்டிருக்கின்றது..
ஆனால் நீயோ அமைதியாக
இருந்து வேடிக்கை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

தனிமை எனக்கு மிகவும்
பிடிக்கும் காரணம்..
ஏமாற்றிச் செல்லும்
உறவுகளை விட
தனிமையே நம்முடன்
பலகாலம் வாழ்கின்றது.

பல கஷ்டங்களை கண்டு
மரத்துப் போன என்
இதயத்திற்கு தனிமையே
போதுமானதாக இருக்கின்றது.

போலியான உறவுகள் பலருடன்
கூடவே பயணிப்பதனை விட
யாருமற்ற தனிமையே சிலநேரம்
உண்மையான உறவாகிவிடும்

உணர்வுகளிற்கு மதிப்பளிக்காமல்
உண்மையான பாசத்தை தராது
உறவுகளே ஒதுக்கிடும் போது
உருவாகுவதே கொடுமையான தனிமை

தடை செய்ய யாருமில்லாமல்
தடுத்து நிறுத்த தடைகள் இல்லாமல்
தனித்து நின்று சாதித்திடும் போது
தனிமைகள் என்றும் சுகந்திரமானவை

தேற்றுவதற்கு யாருமில்லாமல்
தனியாக அழுதிட்ட போதும்
தனிமையில் இன்னல்கள் இல்லை
இடையூறு செய்வோர் யாருமிலர் அங்கே

Thanimai Quotes In Tamil

பல பாடங்களை கற்றுத் தந்து
நம்மை நாமே புரிந்து கொள்ள
நமது உற்ற நண்பனாய்
சிறந்த ஆசானாய் அமைவது தனிமை

பல உறவுகளால் தரமுடியாத
ஆறுதலையும் நிம்மதியையும்
சில நேரம் தனிமை தந்துவிடும்.

உரிமையோடு சிலரை
உறவென்று நினைத்தது
தவறென்று புரிந்து கொண்டேன்..
மீண்டும் தனிமையே போதும்
என்று விலகிக் கொண்டேன்.

வாழ்க்கையில் நான்
நினைப்பதெல்லாம்
கிடைக்காமல் போகும்
போதெல்லாம் எனக்கு தானாக
வந்து ஆறுதல்
சொல்கின்றது தனிமை.

ஆறுதல் இன்றி
தனிமையில் அழுது
முடித்த பின் வரும்
தன்னம்பிக்கை
மிகப் பெரியது..!

வாழ்க்கையில் தனிமையில்
இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்..
நம்முடன் இறுதி வரை
யாரும் வரப்போவதில்லை.

தனிமை இன்பமானது
தனிமை கொடுமையானது
தனிமையில் இனிமை காணப் பழகிவிட்டால்
அது ஒரு தனி உலகம்

உறவுகள் அருகில் இல்லாமல்
தனியாக அழுது முடித்த பின்
உருவாகும் தன்னம்பிக்கை
வாழ்க்கையில் ஈடு இணையில்லாதது

சுற்றி உறவுகள் பல இருந்திட்ட போதும்
சிலரோடு பேசி சிரித்திட்ட போதும்
உள்ளுக்குள் தனியாய் உணர்ந்து
யாரும் இல்லாதது போல உணர வைப்பது தனிமை

அருகில் இருந்தும்
போலியாக இருக்கும்
உறவுகளுடன் இருப்பதை விட..
தனிமையில் இருப்பது மேலானது.

தனிமையின் வேதனையை
உணர்வதற்கு யாருடைய
பிரிவும் அவசியமில்லை..
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க
தெரியாத உறவுகள் போதும்.

தனிமையில் எனக்கு
இனிமை இல்லை என்றாலும்..
அதில் துன்பங்கள் இல்லை
என்பதை உணர்த்த
மறுப்பதில்லை தனிமை..!

தனிமை கவிதை வரிகள்

தனிமை மிகவும்
வித்தியாசமானது நாமே
அதை எடுத்துக் கொண்டால்
ரொம்ப இனிமையாக
இருக்கும்… தனிமையை
மற்றவர்கள் நமக்கு
கொடுத்தால் அது கசக்கும்.!

தனிமை என்பது
யாருமில்லாமல் இருப்பது
அல்ல… நம்மை சுற்றி
எல்லோரும் இருந்தாலும்
நமக்காக யாருமில்லை என்று
உணருவதே.. தனிமை.!

தனிமை நம்மை நெருங்கிடாது
உறவுகளை சேர்த்து வைப்பது ஒரு வழி
கிடைக்கும் தனிமையை சுகந்திரமாய்
அனுபவிப்பதே சிறந்த வழி

தனிமை நம்மை தாக்கிட்ட போதும்
தனியாக உணர்த்திட்ட போதும்
நமக்கு நாமே உறவாகி
நானிலத்தை வென்றிடுவோம்

நெடுந்தூர வாழ்க்கைப் போராட்டத்தில்
தன்னந்தனியாக போராடி
தனக்கென தனி இடம் அமைப்பவரே
என்றென்றும் வாழ்ந்திடுவர்

வலிகளையும்
வேதனைகளையும் தரும்
உறவுகளுடன்
இருப்பதை விட.. தனிமையில்
இருப்பது மன நிம்மதியை
தரும்.

போலியான உறவுகளுடன்
பொய்யான வாழ்க்கை
வாழ்வதை விட.. தனிமை
ஒன்றும் கொடூரமானது
இல்லை.

தனிமை என்பது தனியாக
இருப்பதில்லை.. அனைவரும்
இருந்தும் நமக்காக யாரும்
இல்லாது போல்
உணர்வதே தனிமை.!

நம்மை சுற்றி பல உறவுகள்
கூடி இருந்து களித்திட்ட போதும்
நமக்காக யாருமில்லாதது போல
உணர வைப்பதே தனிமை

கண்களில் வழிந்தோடும் கண்ணீர்
என் கன்னங்களில் உருண்டோட
பொதி சுமக்கும் சுமைதாங்கியாய்
வெறிக்கின்றேன் இவ்வுலகை

Sad Alone Quotes In Tamil

வாழ்க்கையின் ஒவ்வொரு தடையையும்
தனியே கடந்து வருகின்ற போது
யாருமளிக்காமலே தனிமை
தத்தெடுத்து விடும் நம்மை

பல வெற்றிகளின் ஆணி வேராய்
பல படைப்புக்களின் தோன்றுமிடமாய்
பல சிறப்புக்களின் காரணமாய்
சில தனிமைகள் அமைந்திடும்

யாரும் அளித்திட்டால் கசக்கும்
நாமே எடுத்திட்டால் இனிக்கும்
மிகவும் விசித்திரமானது தனிமை
அனுபவித்திடேல் வலிமை கிட்டிடும்

இன்று நானும்
தனிமையில்.. நான்
காட்டிய அன்பும்
தனிமையில்.. என்
வாழ்வும் தனிமையில்..!

தனிமை என்பது நான்
தேடிக்கொண்ட சாபம்
அல்ல நான் என்
உயிருக்கும் மேலாக
நேசித்தவர்கள் எனக்கு
அளித்த பரிசு.

உறவென்று நாம் நினைத்திட்டவர்கள்
விலகிப் போன பின்பு
யாருமில்லா வெறுமைகளை
இயலாமையாய் உணருவதே தனிமை

வாழ்க்கையில் ஒரு நாள்
தனிமையே பல பாடங்களை
கற்றுத் தருமனால்.. நான்
என் வாழ்நாள் முழுவதையும்
தனிமையிலே வாழ
விரும்புகின்றேன்.

தனித்து விடப்படும் போது தான்
நம் பலமும் பலவீனமும் நமக்கே தெரிய வரும்.

தனிமையின் கண்ணீரில் சில
நினைவுகளின் தாகம் தனிந்தது!
சில உறவுகள் நம்மை காயப்படுத்திய போதும்
நம்மை ஆறுதல் படுத்தும் ஒரே ஒரு உறவு தனிமை.

தனிமை எதை புரிய வைத்ததோ இல்லையோ
இவ்வளவு காலம்மிக பெரிய
முட்டாளாக இருந்து இருக்கிறோம்
என்பதை புரிய வைத்தது.

தனிமைகொஞ்சம் வித்தியாசமானது தான்
நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும்
அடுத்தவர் நமக்கு கொடுத்தால்அது கசக்கும்.

இயற்கையின் மறுவடிவமே
தனிமை! இயற்கையை ரசிக்காத
மனிதனும் இல்லை, தனிமையில்
வாழாத மனிதனும் இல்லை!

உன்னைக் காதலித்தேன்
தனிமை கஷ்டமாக இருந்தது!
இப்போ, தனிமையை காதலிக்கிறேன்
உன்னை வெறுத்து!

தனிமை இனிமை என சிலர்
சிரிப்பார் கொடுமை என பலர் அழுவர்.

வலிகள் நிறைந்த வாழ்க்கையில்
என்றும் என்னுடனே ஏமாற்றம் அளிப்பது
என் இனிய நண்பன் தனிமை.

தன் மனதை, தானே புரியும்
தன்மை தனிமைக்கு மட்டும் தான் உண்டு!

இவ்வுலகில் ஏதும் நிரந்தரம் இல்லை,
தனிமை ஒன்றைத் தவிர!

தனிமையை காதலிக்க தனித்து
அமர்ந்திருந்தேன்! உன் தீரா
நினவலைகள் என் நெஞ்சை
தீயாய் எரிக்குதடி…
காயப்பட்டு நான் துடித்தேன்
கட்டியணைக்க யாருமில்லை!

திகட்டத் திகட்ட பேரன்பை கொடுப்பவர்களால்
மட்டுமே, அதற்கு போட்டிப் போட்டு
ஈடுகொடுக்கும் தனிமையும்
வெறுமையும் தந்துவிட்டு செல்ல முடியும்!