ஆசிரியர் கவிதைகள் வரிகள்: ஆசிரியர் கவிதைகள், Aasiriyar Kavithaigal In Tamil, Aasiriyar Kavithaigal In Tamil Images and more quotes, status, messages, sms in tamil language.
ஆசிரியர் கவிதைகள் வரிகள்
எதை நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ள
வேண்டி இருக்கிறதோ..
அதை அதிகம் மற்றவர்களுக்கு
கற்றுக் கொடுங்கள்.
கற்பித்தல் மூலமே சிறப்பாக
கற்றுக்கொள்ள முடியும்.
இரண்டு விதமான ஆசிரியர்கள்
உள்ளனர்..
ஒருவர் எப்படி பிழைப்பு நடத்துவது
என்று கற்றுக்கொடுக்கிறார்..
சிறந்த ஆசிரியர் எப்படி வாழ்வது என்று
கற்றுக்கொடுக்கிறார்.
அறிவின் துளிகளை அள்ளிவந்து
வகுப்பறையெங்கும் புதுமை செய்கிற
அற்புத வித்தகர்கள் நீங்கள்
கை பிடித்து
சொல்லித் தந்து தான்
கைதூக்கி விடுகிறீர்கள்
களிமண்ணையும் வண்ணங்கள்
குழைத்து பெருஞ்சிற்பமாக்கும்
அருஞ்சிற்பிகள் நீங்கள்..
படி படி என பாடஞ்சொல்லும் நீங்கள்
தெய்வத்தினும் ஒரு படி மேல் தான்
நீங்கள் அறியாமை
இருளகற்றும் அறிவுச்சூரியன்கள்
உங்கள் பலகை பாடம்
தான் பல கைகளை உயர்த்தியது
இருட்டுக்கே வெள்ளையடிக்கிற
உங்கள் நல்லமனசு தான்
கடைசிபெஞ்சு மாணவனின்
உள்ளத்தையும் கொள்ளையடித்தது
விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும்
சரிசமமாய் ஏற்கிற சாதகப் பறவைகள் நீங்கள்
நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை – நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்
மழையின் அருமை தெரியாமல்
மழையை கண்டு ஓடுபவர்போல
உங்களைக் கண்டு ஓடினோம்
மழையின் அருமை
கோடையில் தெரியும்
உங்களின் அருமை, பெருமை
இப்போது உணர்கிறேன் !
எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா !
உங்கள் சேவைக்கு
நீங்கள் தந்த கல்விக்கு
நன்றி சொல்வது மட்டும் போதாது
நான் என் ஆயுள் முழுவதும்
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்
உங்கள் சேவையை என்றும்
மறக்க மாட்டேன் !
நன்றியுடன் உங்களை
நினைத்துப் பார்க்கும்
ஆசிரியர் என்றாலே நினைவுக்கு
வருவது..
எளிமை, பாடம் நடத்தும் விதம்,
கலகலப்பான பேச்சு, கோபம்.
தங்கள் சிவப்பு மை பேனாக்களால்
எங்கள் தலை எழுத்தை திருத்தும்
பிரம்மாக்கள் ஆசிரியர்கள்.
சொல் உளி கொண்டு
எங்கள் உள் ஒளி செதுக்கிய
சிற்பிகளே ஆசிரியர்கள்.
ஆசிரியர் கவிதைகள்
எங்கள் அறிவு தாகம் தீர்க்கும்
அருவிகளே ஆசிரியர்கள்.
அறிவினை வரையறையின்றி
மாணவர்களுக்கு வாரி இறைக்கும்
கார்மேகங்கள் ஆசிரியர்கள்.
வாழ்க்கை எனும் ஏணியில்
மேல் ஏற தோள் தந்த ஏணிப்படிகள்
ஆசிரியர்கள்.
எங்கள் மூளையில் ஆணியாய்
அடிக்கப்பட்ட அறிவு..
தீபமாய் ஏற்றப்பட்டது
ஆசிரியர்களினால் தான்.
கறை பூசுதல் எளிது
ஏசுதல் எளிது பரிகசித்தல் எளிது
இவையாவும் கடந்து நீங்கள்
பாலநெஞ்சங்களிடம் காட்டும்
அக்கறை தான் அளவிடற்கு அரிது
எத்தை கேலிகள்
எத்தனை கிண்டல்கள்
எத்தனை துன்பங்கள், தொல்லைகள்
உங்களுக்கு செய்தோம்
இன்று நினைக்கையில்
என் உள்ளம் வலிக்கிறதே
உங்கள் காலில் விழுந்து
மன்னிப்பு கோருகிறோம்
எங்களை மன்னியுங்கள் – ஐயா
எந்த ஆசிரியர் தான் எழுதிய
புத்தகத்தைப் பற்றி மிகவும்
பெருமையாக பேசுகிறாரே..
அவர் தனது மோசமான மகனை
அதிகமாக பாராட்டும் தாய்க்கு சமம்.
பாம்பின் ஒவ்வொரு அசைவையும்
துல்லியமாக நீங்கள் கவனிப்பதை
போன்று..
பாடத்தையும் கவனியுங்கள்..
முழு கவனத்தையும் செலுத்துங்கள்..
பாடம் கற்பிக்கும் போதே
மனதில் பதியும்.
ஒரு மாணவனின் வளர்ச்சி..
மாணவனின் சிந்தனைகள்..
மாணவனின் பழக்கங்கள்..
ஒரு குடும்பத்தின் கனவுகள்..
ஒரு நாட்டின் வலிமை..
ஆசிரியர்களின் கைகளில் தான்
இருக்கிறது.
ஆசிரியர் பிரம்பால் அடித்ததும்..
திட்டியதும் வலித்தாலும்..
அதன் பலன்கள் எதிர்காலத்தில்
புரியும்.
தவறான எண்ணங்களை நீக்கி
நல்வழிப்படுத்தி..
பெற்றோருக்கும் மேலான
கடமைகளை செய்கிறார்கள்
ஆசிரியர்கள்.
உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்
நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை – நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்
Aasiriyar Kavithaigal In Tamil
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
நகங்களை வெட்டி
வகுப்பறையில் போட்டாலும்,
அழகாய் எழுதும் விரல்களை
அவற்றிலிருந்து
எப்படியும் முளைக்க
வைத்துவிடுகிறார்கள்!
அடி பின்னும் பிரம்பில்
அறிவு பின்னும் வித்தை,
அவர்களுக்கு மட்டுமே
வாய்த்திருக்கிறது!
கரும்பலகையையும்,
சுண்ணாம்பையும் வைத்து
உலகத்தின் வரலாற்றையும்,
மாணவர்களின்
வருங்காலத்தையும்
ஒருங்கே எழுதும்
உலகத்தின் வடிவமைப்பாளர்கள்
அவர்கள்;
யாரிடம் கற்றுக் கொள்கிறமோ
அவரே ஆசிரியர்.. போதிப்பவர்கள்
எல்லோரும் ஆசிரியர்கள் அல்ல.
கல்விக் கூடம் ஒரு தோட்டம்..
மாணவர்கள் செடிகள்..
ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள்.!
அன்புள்ள ஆசிரியரே என்னில்
நம்பிக்கையை தூண்டியதற்கு நன்றி..
என் கற்பனையை பற்ற வைக்கிறது..
என்னுள் ஊடுருவி.. கற்றல் ஒரு காதல்.!
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்
உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்
இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை …!
“ஒன்னுக்கு வருது மிஸ்”,
என சொல்பவர்களில்,
எவனுக்கு உண்மையிலேயே
ஒன்னுக்கு வருகிறது
என அவர்களுக்கு மட்டுமே தெரியும்!
30க்கும் 34க்கும் இடையே
முக்கி, முனகி, முட்டியவனையெல்லாம்,
அவர்கள் இரக்கப்பட்டு
35ஐ முட்ட வைத்ததால்,
விண்ணை முட்டும்
பெரும்பணியில் இருக்கிறான்!
லேட்டாய் போனவனை
வெளியே நிற்க வைத்து,
இன்னும் லேட்டாய்
உள்ளே அனுப்பி,
லேட்டாய் போவதன்
சங்கடத்தை உணர்த்தும்
புரியாத புதிர்கள் அவர்கள்!
எததனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால்
நோக்கம், லட்சியம் ஒன்று தானே
என் மாணவன் முன்னேற வேண்டும்
தேர்ச்சிப்பெற வேண்டும்
வெற்றி பெற வேண்டும்
ஆஹா !
எத்தனை உயரிய எண்ணம்
நீங்கள் அல்லவா
வணக்கத்துக்குறியவர்கள்
எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்
இன்று வரையிலும் , இனிமேலும்
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு
நாங்கள் அடையும் புகழ்களுக்கு
உரியவர்கள் நீங்கள் தானே – ஐயா !
அறிவுத் தூண்டுகோல்களுக்கு….
அகரம் சொல்லித் தந்த சிகரங்களே
உங்களுக்கான வாழ்த்துப்பாவினையும்
அதிலிருந்தே தொடங்குகிறேன்
நமக்கு உலகை காட்ட நம்மை
செதுக்கியவள் தாய்..
உலகிற்கு நம்மை காட்ட
செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்.!
குருவின் அருளால் சீடன் நூல்கள்
இன்றியே அறிஞன் ஆகின்றான்.
ஒளிரும் விளக்கை மற்றவர்களுக்கு
கொடுப்பது போல் ஆசிரியர்கள்
இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோர்
பெற்றோர்களையும் விட..
பெரும் மதிப்புக்கு உரியவர்கள்.
நமக்கு கற்பிப்பவர்கள் எல்லாம்
ஆசிரியர்கள் அல்ல..
யாரிடம் நாம் கற்றுக்கொள்கிறமோ
அவரே நமக்கு ஆசிரியர்.
இன்றைய மாணவர்கள் நாளைய
தூண்கள்..
அந்த தூண்களை வடிவமைப்பது
ஆசிரியர்கள் தான்.
நாங்கள் பரிட்சை எழுத
நீங்கள் அல்லவா படித்தீர்கள்
நாங்கள் வெற்றிப் பெற
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள்
கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
எங்களை செதுக்கிய
சிற்பி அல்லவா நீங்கள்
தேசம் சந்திக்கிற ஒவ்வொரு
கசப்பான சம்பவங்களிலும்
இறுதியாய் உதிர்க்கிற ஒற்றைக்கருத்து
ஆசான்களின் கைகள் கட்டப்பட்டதே
இக்கொடூரங்களுக்குக் காரணம் என்பதாய் இருக்கும்…
எது எப்படி இருப்பினும்
எண்ணமெலாம் மாணவர்
நலனிலேயே நிமிடங்களை
நகர்த்துகிற நல்லாசான்களே
கேள்விகேட்கக் கற்றுக்கொடுத்த
சாக்ரடீசில் இருந்து,
பதில்களைக் கற்றுக் கொடுத்த
நியூட்டன் வரை
ஆசிரியர்களாய் இருந்ததாலேயே,
அறிவியல் உலகமும்,
அறிவு உலகமும்
நிற்காது சுற்றிக்கொண்டிருக்கிறது!
இன்னும் சுற்றும்!
நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை – நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள்,
ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்
உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்
நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை – நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்
Aasiriyar Kavithaigal In Tamil Images
பல நேரங்களில் மாணவர்களாகவும்
சில நேரங்களில் ஆசிரியர்களாகவும்
இருக்கும் அனைவருக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!
அறிவை மற்றவர்களுக்கு ஆனந்தமாக
போதிக்க கற்றவனே
சிறந்த ஆசிரியர்.
இப்பெருவுலகில் ஏதோ ஒரு
குழந்தையின் மனதில் நிச்சயம்
எழுதப்பட்டுருக்கும் உங்களுக்கான
நல்லாசிரியர் என்ற உயர்விருது
அந்த அங்கீகாரத்தை மனதில் வைத்தே
இன்னுஞ் சிறப்பாய் பணிசெய்யுங்கள்
மாற்றத்தின் மகாத்மாக்களே
உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்
இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை …!